பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் தமது முன்னாள் உதவியாளட் அலன் தான் -க்குத் தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என நடப்பு பண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார்.
“அவர் சுயேச்சை வேட்பாளர். நான் பிஎன்-னில் இருக்கிறேன்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
பண்டான் தொகுதியைத் தற்காக்க தாம் தெரிவு செய்யப்படா விட்டாலும் தம்மை யாரும் துணிச்சலுடன் கேட்டுக் கொண்டால் பிரச்சாரம் செய்யத் தயார் என ஒங் சொன்னார்.
கட்சியிலிருந்து ஒதுக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதால் யாரும் தம்மை அவ்வாறு கேட்டுக் கொள்ள
மாட்டார்கள் என அவர் கருதுகிறார்.
என்றாலும் பண்டான் மசீச வேட்பாளர் கேரி லிம்-முக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்வாரா என்ற
கேள்விக்கு ஒங் மழுப்பலாகப் பதில் அளித்தார்
“எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தேர்வு செய்வது அவரைப் பொறுத்தது. இந்த இடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”
“நீங்கள் அந்தப் பொருளை விற்க விரும்பினால் என்ன விற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். அதன் நன்மைகளையும் பண்புகளையும் நீங்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். ஆனால் எனக்கு
அவரைப் பற்றி எதுவும் தெரியாது.”
“எனக்கு விருப்பமில்லை என்பது அதன் பொருள் அல்ல. நாண் கிண்டலாகவும் சொல்லவில்லை. அவர் என்னுடைய பழைய நண்பராக இருந்தால் எதனைச் சொல்வது என்பது எனக்குத் தெரியும்,” என்றார் ஒங்.
உறுதியான பதிலைக் கொடுக்குமாறு நிருபர்கள் நெருக்கிய போது அவர் சொன்னார்: “லிம்-முக்குப் பிரச்சாரம் செய்வது பற்றி நான் பரிசீலிப்பேன். ஆனால் அந்த வேலைக்கு பொருத்தமானவர் மசீச தலைவர் சுவா தான்.
காரணம் லிம் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என சுவா எண்ணியுள்ளார்.”