தங்களின் ஆகக் கடைசி கருத்துக்கணிப்பைப் பிஎன் தலைவர் நஜிப் நிராகரித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் ஆய்வு மையம் (யுஎம்சிடெல்) ஒரு காலத்தில் அவர் தங்கள் ஆய்வு முடிவுகளைக் கண்டு மனம் மகிழ்வார் என்று குறிப்பிட்டது.
“முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி அவர் தெரிவித்த கருத்து வேறு மாதிரியாக இருந்தது.
“நாங்கள் (தேர்தலுக்குப் பின்) பிஎன் ஆட்சியே தொடரும் என்று கூறியது பற்றி 2012, ஜனவரி 21-இல் குவாந்தானில் கம்போங் தஞ்சோங் லும்பூரில் மஜ்லிஸ் இஷான் சமுத்ரா நிகழ்வில் பேசியபோது கருத்துரைத்த நஜிப் யுஎம்சிடெல்-இன் கணிப்பு மனம் குதூகலிப்பதாகக் குறிப்பிட்டார்.
நஜிப் தெரிவித்த கருத்து ஆர்டிஎம் பிரதான செய்தியறிக்கையிலும் டிவி 3 செய்தி அறிக்கையிலும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவிலும் வெளி வந்திருந்தன என்பதை அம்மையம் சுட்டிக்காட்டியது.
யுஎம்டிசெல்-இன் ஆய்வு நேர்முறையானது என ஜெர்லுன் எம்பி முக்ரிஸ் மகாதிர்கூட ஜனவரி 25-இல் பாராட்டி இருந்தார்.
நேற்று நஜிப், மக்கள் விரும்பும் பிரதமர் தேர்வில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைவிட தாம் நான்கு புள்ளிகள் பின்தங்கி இருப்பதாகக் காட்டும் கணிப்பை அபத்தம் என்று குறிப்பிட்டு ஒதுக்கித் தள்ளினார்.
“அந்தக் கருத்துக்கணிப்பில் எனக்கு உடன்பாடில்லை. நாங்கள் சொந்தமாகக் கருத்துக்கணிப்பு செய்திருக்கிறோம். அது நாங்கள் முன்னிலையில் இருப்பதைக் காண்பிக்கிறது”, என்றார்.
பிஎன்-ஆதரவு ஆய்வாளர்களும் யுஎம்சிடெல்-இன் ஆய்வுமுறைகள் குறித்து கேள்வி எழுப்பினர். ஒரு கல்வியாளர் பக்காத்தான் ஆள்களை “ஏற்பாடு செய்து” பேச வைத்துள்ளது என்று குறைகூறினார்.
அதற்கு மறுமொழி அளித்துள்ள யுஎம்சிடெல், ஆய்வு பற்றிக் கேள்வி எழுப்புவோருடன் விவாதிக்க தயாராக இருப்பதாய் அறிவித்துள்ளது.
“ஆய்வை அணுக்கமாக ஆராய்ந்து பாராமல் கல்வியாளர்கள், பயனற்ற, அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளைச் சொல்வதுதான் வருத்தமளிக்கிறது”, என்றது கூறிற்று.
ஜனநாயக, தேர்தல் ஆய்வு மையம் தெரிவித்த அந்த கருத்துக்கணிப்பு சரியானதே, நம் பிரதமர் அதை ஏற்காவிட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனெனில் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள், வழக்கம்போல் தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றிவிடலாமென்று நினைத்தால் ஏமாற்றம் பாரிசானுக்கே. 56 வருடங்களாக உறங்கிக்கொண்டிருந்த மக்கள் இப்பொழுது விழித்துக்கொண்டுவிட்டார்கள்.
நேர்மையான ஜனநாயகத்திற்கு எதிராக என்ன பித்தலாட்டம் வேண்டுமானாலும் செய்து பதவியில் தொடர்து நீடிப்பது என்ற கீழ்தரமான கொள்கையுடன் நசிப்பும் அவர்தம் கட்சியினரும் ஓட்டுகாக பலபல கேவலமான, அருவருக்கதக்க அரசியல் அணுகுமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அவர்களுக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும். நெருப்புகோழி தலையை மண்ணுக்குள் புதைத்துகொண்டு உலகமே இருண்டுவிட்டதாய் எண்ணுவதுபோல், இவர்களை விட்டால் மலேசியாவை ஆழ வேறு தகுதியான ஆளே இல்லை என்று கருதினால் இவர்களைப்போல் அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது!!