13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள்

womenமே 5 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள். அந்த விகிதம் முடிவு  எடுக்கும் நிலைகளில் குறைந்தது 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற அனைத்துலக  இலக்கை விட மிகவும் குறைவாகும்.

டிஏபி தனது மொத்தம் 153 வேட்பாளர்களில் 22 பெண்களை (14.4 விழுக்காடு) நிறுத்தியதின் மூலம்  முதலிடத்தை பெறுகின்றது. அடுத்து மசீச (13.3 விழுக்காடு), கெராக்கான் (12.5 விழுக்காடு), பிகேஆர் (11.1  விழுக்காடு), அம்னோ (9.1 விழுக்காடு), பாஸ் (8.1 விழுக்காடு).

என்றாலும் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அம்னோவாகும். (469
வேட்பாளர்களில் 42 பேர்). அடுத்த நிலையில் பிகேஆர் உள்ளது. (271 வேட்பாளர்களில் 30 பேர்).

பிஎன் -னில் உள்ள பெரிய கட்சிகளில் குறைந்த எண்ணிகையில் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது
மஇகா-வாகும். அதன் 28 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே பெண் அல்லது 3.6 விழுக்காடு.

women1மொத்தம் இந்தத் தேர்தலில் போட்டியிடும்  1900 வேட்பாளர்களில் சுயேச்சைகள் உட்பட 168 பேர் மட்டுமே
(8.8 விழுக்காடு) பெண்கள். அந்த எண்ணிக்கை 2008 தேர்தலில் போட்டியிட்ட 120 பெண்களுடன்
ஒப்பிடுகையில் முன்னேற்றமாகும்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பிரபலமான மகளிர் போராளி மரினா மகாதீர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எல்லா அரசியல் கட்சிகளும் ஐநா நிர்ணயித்துள்ள இலக்கிற்கு ஏற்ப தங்கள் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

TAGS: