பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் வேட்பாளர் தமது வேட்பு மனுவைச் சமர்பிக்கவில்லை. அதனால் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் இப்ராஹிம் அலிக்கும் நிக் அப்டு நிக் அப்துல் அஜிஸுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிகழும்.
பிஎன் சார்பில் நிறுத்தப்படுவதற்கு இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால் அவரது பெர்க்காசா சகாவான சுல்கிப்லி நூர்டினை பிஎன் ஷா அலாமில் நிறுத்தியுள்ளது.
இப்ராஹிம் பிஎன் வேட்பாளாராக நிறுத்தப்படுவதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூட ஆதரவு தெரிவித்திருந்தார். அதனால் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு பிஎன் வேட்பாளர் சே ஜொஹான் சே பா-வுக்கு ஆணையிடுமாறு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கை கேட்டுக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாசிர் மாஸ் அம்னோ தொகுதித் துணைத் தலைவரான சே ஜோஹான் வேட்பாளர் நியமன மய்யத்தில்
காணப்பட்டார். ஆனால் தமது மனுவைச் சமர்பிக்கவில்லை.
பாசிர் மாஸ் தொகுதியில் இப்ராஹிம் இப்போது ஏழாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த ஆறு
போட்டிகளில் அவர் மூன்றில் மூன்று வெவ்வேறு கட்சிகளில் நின்று வெற்றி பெற்றார்.
2004ம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட அவருக்கு மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 15 விழுக்காடு மட்டுமே கிடைத்தது.
இந்த முறை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டின் புதல்வர் நிக் அப்டு எதிர்க்கிறார். நிக் அப்டு பாசிர் மாஸில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.