பக்கத்தான் 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும்!

anwar-என். எல். ரசல், ஏப்ரல் 29, 2013.

மே 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் மக்கள் கூட்டணி 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும் என்று எண்கணிப்பாளர் கூறுகிறார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளே, ஏப்ரல் 3, 2013,  எண்கணிப்பு நோக்கின்படி எதிர்மறையானதாகக் கருதப்படுகிறது. அது அரசாங்க மாற்றத்திற்கான “கட்டமைப்பு நகர்வு” இருப்பத்தைக் குறிக்கிறது. அதன் அர்த்தம் வேறொரு அரசாங்கம் என்பதாகும் என்று எண்கணிப்பாளர் என்.எல். ரசல் கூறுகிறார்.

தேர்தல் வேட்பாளர் நியமன நாளும், ஏப்ரல் 20, 2013, ஒரு சாதகமான நாளாக அமையவில்லை. அந்நாள் ஒத்துபோக இயலாத கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும் நாளாகும். அதனால்தான் பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்குள்ளும் சச்சரவுகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. அதே சூழ்நிலைதான் எதிரணிக் கூட்டணியிலும் காணப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கது இருக்கைகள் பங்கீடு பற்றியதாகும் என்று ரசல் கூறுகிறார்.

ஏப்ரல் 22 லிருந்து வாக்களிப்பு நாள் வரையில் மக்களின் மனப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். தேர்தலுக்கு முந்திய நாளில், 4 மே, கடும் மனநிலைத் தாக்கம் காரணமாக பாரிசன் தேர்தல் இயந்திரம் வலுவிலக்கும்.

தமது தனிச்சிறப்பு வாய்ந்த எண்கணிப்பு மற்றும் தேர்தல் தினத்தன்று அமையும் சோதிட அடிப்படையிலான கிரகங்களின் நிலை ஆகியவற்றால் எதிர்பார்க்கப்படும் விளைவு பெரும் அரசாங்க கட்டமைப்பு மாற்றம் என்று அவர் கூறுகிறார்.

1 um2மேலும், தேர்தல் நாளான மே 5 இல் சூரியன் இடம் மாறி சனிக்கிரகத்துடன் மோதுகிறது. அது ஆட்சியில் இருப்பவருக்கு சாதகமானதல்ல.

இறுதி முடிவுகள்

பொதுத் தேர்தல் நல்லதோர் அமைதியான சூழ்நிலையில் நடைபெறுமானால், தமது கணிப்பின்படி தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என்று அவர் கூறுகிறார்:

நாடாளுமன்றம்: பாரிசான் 98; பக்கத்தான் 124 இருக்கைகள் (தவறுக்கு 3லிருந்து 5 விழுக்காடு வரையில் இடமளிக்கவும்.)

மாநிலம்: எதிரணி 6 மாநிலங்களைக் கைப்பற்றலாம். 7 ஆவது மாநிலம் நெகிரி செம்பிலான் அல்லது ஜொகூராக இருக்கலாம். இரு இருக்கை பெரும்பான்மையில் இருக்கும்.

5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குத் தாவுவதை எதிர்பார்க்கலாம்.

குறைந்தபட்சம் 118 இருக்கைகளுடன், கட்சி தாவுதலையும் எடுத்துக் கொண்டால், முற்றிலும் வேறுபட்ட அரசாங்கம் அமைவது மிகவும் சாத்தியமான ஒன்றே.

தமது தேர்தல் முடிவுகள் குறித்த இக்கணிப்பு தாம் கடந்த 25 ஆண்டுகாலமாக மேற்கொண்ட ஆராட்சி தகவல் குறிப்புகள் மற்று ஆர்வமான முயற்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று என். எல். ரசல் கூறுகிறார்.

22 ஏப்ரல், 2013. பெட்டாலிங் ஜெயா.

 

TAGS: