ஈசா ஜெம்போலில் ஒரு பாடகருடன் மோதுகிறார், ரயிஸ் போட்டியிடவில்லை

1 isaநெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா சமட்,  ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.  அவரை எதிர்ப்பவர் பாஸ் வேட்பாளர் அயிஷா வான் அரிப்பின். இவர், 1990 ஆம் ஆண்டுகளின் பிரபலமான பாடகராவார்.

இதனிடையே, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் தேர்தலில் போட்டியிட மாட்டார். அவர் ஜெலுபு எம்பி ஆவார்.

இப்போது கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனத்தின் (பெல்டா) தலைவரான ஈசா, 2009 இடைத் தேர்தலில் போர்ட் டிக்சன் பகுதியில் உள்ள பாகான் பினாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

அம்னோ இளைஞர் தலைவர், கைரில் ஜமாலுடின் அபு பக்கார், அவரது ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்.

TAGS: