பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது

இந்த நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட 130 நாடாளுமன்றத்  தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றதின் வழி பிஎன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அந்த மிகச் சிறிய தொகுதிகளில் 112ஐ பிஎன் வென்றது. அதனால் அதற்கு சிறிய பெரும்பான்மை கிடைத்தது என வழக்குரைஞர் அண்ட்ரூ கூ கூறினார். என்றாலும் பிஎன்…

நஸ்ரி : பிஎன் எம்பி-கள் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும்

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கும். ஆனாலும், பிஎன் எம்பிகள் எப்போதும்போல் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்றம் இருக்காது. நாடாளுமன்றத்தில் பிஎன்னின் இரண்டு உதவி கொறடாக்களில் ஒருவர் என்ற முறையில் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று இதனைத் தெரிவித்தார். “வழக்கமான விவகாரங்களில் என்ன…

ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார் விலைகளைக் குறைக்கும்

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்ததுபோல், இன்னும் ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார்களின் விலைகளை 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கும் என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்  தெரிவித்துள்ளார். . தம் அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்தபா, “ஒரே முறையில் கார் விலைகள் குறைக்கப்படாது”,…

‘சீரமைப்புக்காக பெரும்பான்மை மக்களுடன் பிஎன் ஒத்துழைக்க வேண்டும்’

தேசிய இணைக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் பிஎன் முதலில் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்த “பெரும்பான்மை மக்களுடன்’ ஒத்துழைக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் அசிசான் வான் இஸ்மாயில் வலியுறுத்தினார். “இணக்கம் காண்பதற்குமுன் பெரும்பான்மை மக்களின் குரல் என்ற முறையில், அரசியல் சீரமைப்பு, தேர்தல் சீரமைப்பு, நாடாளுமன்ற…

‘தேர்தல் தொகுதியைத் திருத்தி அமைப்பது பிஎன்-னுக்கே சாதகமாகிறது’

ஒரு தேர்தல் தொகுதியின் எல்லை திருத்தி அமைக்கப்பட்டதும் அங்கு பிஎன் கூட்டணிக்கு எளிதாக வெற்றி கிடைத்து விடுகிறது என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் மையம் (யுஎம்சிடெல்) கூறுகிறது. ஒரு தொகுதியின் எல்லைக்கோடுகள் திருத்தி அமைக்கப்பட்டதும் அத்தொகுதியில் பிஎன்னுக்கு சராசரி 60 விழுக்காடு வாக்குகள் கிடைத்து விடுவதைத்தான் வரலாறு…

இணையத்தளத்தில் தணிக்கை இல்லை என்கிறார் புதிய தகவல் அமைச்சர்

மாற்றரசுக் கட்சி செய்திகள் பாரம்பரிய தகவல் ஊடகங்களில் இடம்பெறுவதற்குக் கட்டுப்பாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட புதிதாக தகவல் அமைச்சராக பொறுபேற்றுள்ள அஹ்மட் சபரி சிக்,  இணையத்தில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது என்றார். “அவர்களின் செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை என்பது உண்மை அல்ல. பாரம்பரிய ஊடகங்களில் வருவதில்லை. “ஆனால்,  புதிய…

‘நேர்மை பற்றாக்குறையாக இருக்கும்போது பிஎன்-னுக்கு ஆதரவு சரிகிறது’

நேர்மை குறித்த எதிர்பார்ப்புக்களுக்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு பிஎன் வழி நடத்தும் கூட்டரசு அரசாங்கத்திற்கான ஆதரவு சரிவதற்கான காரணம் என  பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருக்கிறார். 2004 பொதுத் தேர்தலில் அப்துல்லா அகமட் படாவி தலைமையில் பிஎன் மகத்தான வெற்றி பெற்றதைக்…

‘செலுத்தப்பட்ட வாக்குகள் என்பதை மக்கள் மனதில் திணிக்க வேண்டாம்’

அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து  பிஎன் வெற்றியின் சட்டப்பூர்வத் தன்மை மீது மக்கள் மனதில் எண்ணங்களை 'திணிப்பதை' நிறுத்திக்  கொள்ளுமாறு இன்னொரு அம்னோ தலைவர் பக்காத்தான் ராக்யாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகமான இடங்களை…

‘சீனர் சுனாமி’ என்ற கருத்தை நெகிரி மந்திரி புசாரும் நிராகரிக்கிறார்

13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு 'சீனர் சுனாமி' காரணம் என பிஎன் தலைவர்  நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்  முகமட் ஹசானும் சேர்ந்து கொண்டுள்ளார். அண்மைய தேர்தல் முடிவுகள் இளம் வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன்…

ஜோகூரில் கட்சி தீர்மானத்தை மீறி ஆட்சிக்குழுவில் இணைந்தார் மசீச பிரதிநிதி

பூலாய் செபாதாங் சட்டமன்ற உறுப்பினர் டீ சியு கியோங்,  அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் முதலாவது மசீச சட்டமன்ற பிரதிநிதியாகியுள்ளார். அவர், இன்று காலை ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆட்சிகுழுவில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப்…

சபா, சரவாக் எம்பி-க்கள் அமைச்சரவைப் பதவிகளை நிரப்புவார்கள்

அமைச்சரவைப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக் கட்சிகளான  மசீச-வும் கெராக்கானும் முடிவு செய்ததைத் தொடர்ந்து சபா, சரவாக்கைச் சேர்ந்த புதுமுகங்கள் காலி  இடங்களை நிர்ப்புவர் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது. மே 5 பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர்களுடைய…

‘தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மூலம் பிஎன் அதிகாரத்தில் நீடிக்க…

நடப்பு தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டால் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு மேற்கொள்ள வேண்டிய  தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் -னுக்கு உள்ள  ஒரே நம்பிக்கை என டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் கூறுகிறார். மிகவும் குறுகிய பெரும்பான்மையில் பிஎன்…

பிஎன் அரசாங்கத்தில் மசீச-வின் பங்கு தொடர வேண்டும் என்கிறார் கைரி

பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என செய்துள்ள முடிவை மசீச மறுஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். மசீச-வை வாக்காளர்கள் ஆதரிக்காததால் அந்த சமூகத்தின் பேராளர்கள் இல்லாமல் பிஎன் அரசாங்கத்தை…

அன்வாரின் முன்னாள் ‘உற்ற தோழர்கள்’ பிஎன் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்

பெர்மாத்தாங் பாவ் பிஎன் வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில், அத்தொகுதியைக் கைப்பற்றுவதற்கு உதவியாக அன்வார் இப்ராகிமின் “உற்ற தோழர்களை”த் தமக்குப் பக்கபலமாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். அன்வாரின் தோழர்கள் என்று சொல்லப்படும் அவ்விருவரும்- கல்வியாளர் சித்திக் பாபாவும் இஸ்லாமிய ஆய்வாளர் அய்டிட் கசாலியும்- முன்னாள் பாஸ் கோம்பாக் சித்யா சட்டமன்ற உறுப்பினர் அசன்…

செய்தியாளர்கள்மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்

நேற்றிரவு, ஜோகூர் ஜெயாவில் ஒரு விருந்தில் உரையாற்றிய  மசீச தலைவர் டாக்டர் சொய் லெக்-கை அதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் சினமடைய வைத்தன. அதன் விளைவாக அவர் செய்தியாளர்கள்மீது சீறி விழுந்தார். அவ்விருந்தில் உரையாற்றிய சொய் லெக், அரசாங்கத்தை மாற்றுவது என்பது ஆடைமாற்றுவது போன்றதல்ல என்பதை விருந்துக்கு வந்திருந்த…

வேட்பாளர் நியமன நாளன்று பிஎன் ரொக்கப் பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்தது

பிஎன் அலோர் ஸ்டார், நிபோங் திபால் ஆகியவற்றிலுள்ள வேட்பாளர் நியமனங்களுக்கு அருகில் பொது மக்களுக்கு ரொக்கப்பற்றுச் சீட்டுக்களை கொடுத்ததாக  Pemantau எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு கூறிக் கொண்டுள்ளது. அலோர் ஸ்டாரில் விநியோகிக்கப்பட்ட ரொக்கப்பற்றுச் சீட்டுக்களின் மதிப்பு 80 ரிங்கிட் என்றும் அந்தக் குழுவில் ஒர் உறுப்பினரான மரியா…

பாரிசான் வேட்பாளர் : நாடற்ற இந்தியர்களே பொறுமையாக இருங்கள்!

ஜொகூர், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதி பின் வேட்பாளர் நாடற்ற இந்தியர்களின் பிரச்னை விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அத்தொகுதி இந்திய வாக்காளர்களிடம் கூறினார். இந்த விசயத்தில் அரசாங்கம் இன்னொரு சாபாவை உருவாக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றாரவர். சபாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களுடன் நாடற்ற இந்தியர்களை இணைத்துப் பேசிய அந்த…

பிஎன் அரசாங்கம் சபாவுக்கு எண்ணெய் உரிமப் பணத்தில் 20 விழுக்காட்டுக்கு…

பிஎன் கூட்டரசு அரசாங்கம் சபாவுக்குக் கொடுத்துள்ள சிறப்பு நிதிகள் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அந்த மாநிலத்துக்கு கொடுப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ள 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தை விட கூடுதலானவை. இவ்வாறு அந்த மாநில பிஎன் தலைவர் மூசா அமான் கூறுகிறார். சபாவில் பிஎன் வெற்றி பெற்றால்…

‘பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும்’

இன்று பினாங்கில் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாநில பிஎன் பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டு வருகிறது.  இதே வாக்குறுதியை பக்காத்தான் ரக்யாட்டும் அதன் பரப்புரைகளில் சொல்லி வருகிறது. தீர்வையற்ற துறைமுகம் இருந்தால் பினாங்கு…

அன்வாரின் புகழைக்கண்டு அஞ்சவில்லை என்கிறார் போட்டியாளர்

முன்னாள் பினாங்கு பாஸ் தேர்தல் இயக்குனர் மஸ்லான் இஸ்மாயிலிடம் பெர்மாத்தாங் பாவில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்க்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் கவனத்தைக் கவரும்  இன்னொருவர் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரீஸல் நயினா மரைக்கான். அவர் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார்.…

பிஎன் வேட்பாளர் பட்டியலில் இப்ராஹிம் அலி இல்லை, சைபுடின் இடம்…

பராமரிப்பு அரசாங்கத்தின் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா தமது பாகாங் தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு அங்கு மீண்டும் நிறுத்தப்படுகிறார். அந்தத் தகவல் இன்று அறிவிக்கப்பட்டது. முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட அம்னோ தலைவர் என வருணிக்கப்படும் சைபுடின் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஆவார்.…

ஈசா ஜெம்போலில் ஒரு பாடகருடன் மோதுகிறார், ரயிஸ் போட்டியிடவில்லை

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா சமட்,  ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.  அவரை எதிர்ப்பவர் பாஸ் வேட்பாளர் அயிஷா வான் அரிப்பின். இவர், 1990 ஆம் ஆண்டுகளின் பிரபலமான பாடகராவார். இதனிடையே, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் தேர்தலில் போட்டியிட மாட்டார்.…

கூட்டரசு பிரதேசத்தில் கவனிக்க வேண்டிய மூன்று தொகுதிகள்

லெம்பா பந்தாய்,  புத்ராஜெயா,  பண்டார் து ரசாக் ஆகியவை  13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு பிரதேசத்தில் மிகவும் கவனிப்புக்குரிய தொகுதிகளாக உருவாகியுள்ளன. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று காலை அறிவித்தார். பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங்…