ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார் விலைகளைக் குறைக்கும்

1 musபிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்ததுபோல், இன்னும் ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார்களின் விலைகளை 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கும் என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்  தெரிவித்துள்ளார். .

தம் அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்தபா, “ஒரே முறையில் கார் விலைகள் குறைக்கப்படாது”, என்றார்.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப படிப்படியாகத்தான் விலை குறைக்கப்படும். அந்நடவடிக்கை கார் தயாரிப்பாளர்களிடையே போட்டியிடும் ஆற்றலையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் என்றாரவர்.

சுங்க வரியைக் குறைத்தால்கூட காரின் விலை குறையும் என்பதை ஓப்புக்கொண்ட அமைச்சர், ஆனால் அரசாங்கம் அதைச செய்யாது என்றார். ஏனென்றால் சுங்க வரி வழி நாட்டுக்கு ரிம 7 பில்லியன் வருமானம் கிடைக்கிறது.

ஒரே முறையில் சுங்க வரியையும் கார் விலையையும் குறைத்தால் 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் கார் தயாரிப்புத் தொழில் பாதிக்கப்படும் என்றாரவர்.

 

TAGS: