பூலாய் செபாதாங் சட்டமன்ற உறுப்பினர் டீ சியு கியோங், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் முதலாவது மசீச சட்டமன்ற பிரதிநிதியாகியுள்ளார்.
அவர், இன்று காலை ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆட்சிகுழுவில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளராக அவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது செயலால் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சங்கடமடையலாம். ஏனென்றால், அரசியலில் சுவாவால் வளர்த்துவிடப்பட்டவர் டீ. சுவா அமைச்சராக இருந்தபோது டீ அவரின் அரசியல் செயலாளராக இருந்தார். பின்னர் சுவா தலைவரானதும் கட்சியின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
பொதுத் தேர்தலில், 2008-இல் அடைந்ததைவிட மிக மோசமான அடைவுநிலையைக் கண்டால் அரசாங்கப் பதவி எதனையும் ஏற்பதில்லை என மசீச பொதுப்பேரவை ஏற்கனவே தீர்மானித்திருந்தது. அம்முடிவைக் கடந்த சனிக்கிழமை சுவாவின் தலைமையில் கூடிய அதன் தலைமை மன்றமும் உறுதிப்படுத்தியது.
“13வது பொதுத் தேர்தலில் அடைவுநிலை மோசமாக இருந்தால் அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்று 2011, 2012 பொதுப்பேரவையில் செய்த தீர்மானங்களின்படி கட்சி நடந்துகொள்ளும்”, என சுவா கூறியிருந்தார்.
ஆனால், ஜோகூரைப் பொறுத்தவரை கட்சி அதன் தீர்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், ஜோகூர் சுல்தான் மாநில ஆட்சிக்குழுவில் சீனர் பிரதிநிதித்துவம் இருப்பதை விரும்புகிறார்.
ஜோகூரில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மசீச இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. ஒன்று பூலாய் செபாத்தாங், மற்றது பாலோ. டீ, மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பூலாயில் 3,412 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
பெமானிஸில் கெராக்கான் வேட்பாளர் லாவ் சின் ஹூன் வெற்றி பெற்றார். ஆனால், அவர் மாநில ஆட்சிக்குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.
மிஸ்டர் லோயர் பூரோ “சோய் லேக்” இப்ப என்னா செய்யபோற? எதிர் கட்சி காரர்களை எப்படியெல்லாம் வசைபாடினாய் , உன் இனத்தை நீயே தூற்றினாய், பலன் படுதோல்வி !! முடிந்தால் johor சுல்தானின் ஆணையை மீறிப்பார், இடம் தெரியாமல் தொலைத்து போவாய். எங்கயாவது ஓடிபோய்விடு, இனியும் உன் பேச்சுக்கு மதிப்பில்லை!!
எல்லாம் பதவி ஆசைதான் காரணமாக இருக்கும். வேறு என்ன ? சுய மானம் இருந்தால் இப்படி செய்வாரா இந்த தறிகெட்ட மனுஷன்?
என்ன தான் நடக்குது …..
வாழ்த்துக்கள் டீ சியிவ் அவர்களே . மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்தெடுக்கப் பட்டுடு சேவை செய்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்றால் இனி வரும் காலங்களில் மக்கள் எப்படி அதரளிப்பார்கள் .
இந்த நேரத்தில் புதிய ஜோகூர் மாநில முதல்வராக பொறு பேற்றிற்கும் மாண்பு மிகு டத்தோ காலிட் நோர்டின் அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .வாழ்த்துக்கள்
மக்களால் தேர்தெடுக்க பட்ட பிரதிநிதி மக்களுக்கு கட்டு பட வேண்டும். கட்சி சொல்வதை கேட்டால் வோட்டு போட்ட மக்களுக்கு என்ன நன்மை, ஆக MCA பிரதிநிதி ஜொஹுர் மாநில ஆட்சி குழுவில் இடம் பெற்றது நன்று. வாழ்துக்கள்.
சபாஷ் KRISHNAN BUKIT SELAMBAU கட்சியாவது மண்ணாங் கட்டியாவது !