கூட்டரசு பிரதேசத்தில் கவனிக்க வேண்டிய மூன்று தொகுதிகள்

1 ftலெம்பா பந்தாய்,  புத்ராஜெயா,  பண்டார் து ரசாக் ஆகியவை  13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு பிரதேசத்தில் மிகவும் கவனிப்புக்குரிய தொகுதிகளாக உருவாகியுள்ளன.

அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று காலை அறிவித்தார்.

1 ft1பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், லெம்பா பந்தையில் அதன் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆரின் நுருல் இஸ்ஸாவுக்கு எதிராகக் களமிறக்கப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங் மன்சூர் புத்ரா ஜெயாவைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வார். அங்கு அவரை எதிர்ப்பவர் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா.

மசீச பண்டார் துன் ரசாக் இளைஞர் தலைவர் தான் கொக் எங் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் அதன் நடப்பு எம்பியான பிகேஆரின் அப்துல் காலிட் இப்ராகிமுடன் மோதுகிறார். .

கூட்டரசு பிரதேசத்துக்கான முழு பட்டியல்:

– ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின் (லெம்பா பந்தாய்)

– முகம்மட் ஷாபி அப்துல்லா (வங்சா மாஜு)

– அஹ்மட் பவுசி ஜஹாரி (சித்தியா வங்சா)

– ஜோஹாரி அப்துல் கனி (தித்திவங்சா)

– ஏ.சந்திரகுமணன் (கெப்போங்)

– டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய் (பத்து)

– ஜெயந்தி தேவி பாலகுரு (செகாமாட்)

– பிரெங்கி கான் ஜோன் ஸின் (புக்கிட் பிந்தாங்)

– நிக்கோல் வொங் சியாவ் திங் (சீபூத்தே)

– தியோ சீ ஹூய் (செராஸ்)

– தான் கொக் எங் (பண்டார் துன் ரசாக்)

– தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் (புத்ரா ஜெயா)

– ரோஸ்மான் இஸ்லி (லாபுவான்)

 

TAGS: