‘பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும்’

penangஇன்று பினாங்கில் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாநில பிஎன் பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டு வருகிறது.  இதே வாக்குறுதியை பக்காத்தான் ரக்யாட்டும் அதன் பரப்புரைகளில் சொல்லி வருகிறது.

தீர்வையற்ற துறைமுகம் இருந்தால் பினாங்கு மக்கள் தீர்வையற்ற பயனீட்டுப் பொருள்களையும் சேவைகளையும் பெறுவர். இதனால் உணவுப் பொருள்கள், குடிபானங்கள் விலைகள் குறையும்.  சில்லறை வணிகம் பெருகி நிறைய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என அவ்வறிக்கை கூறியது.

சுற்றுப்பயணிகளும் குறைந்த விலையில் பொருள் வாங்க முடியும் என்பதுடன் முதலீட்டாளர்களும் பினாங்கில் பொருள்களைத் தீர்வையின்றி ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் முடியும்.  இது வர்த்தகம் பல்கிப் பெருக வழிகோலும் என்றந்த அறிக்கை மேலும் கூறியது.

20,000 குறைந்த, நடுத்தர விலை வீடுகள் கட்டித்தர பிஎன் வாக்குறுதி அளித்துள்ளது. (பக்காத்தான் 22,000 வீடுகள் கட்டிதர வாக்களித்துள்ளது). அத்துடன் குறைந்த வருமானம் பெறுவோருக்காக வாடகை மூலமாகவே வீடுகள் வாங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படும்.

பினாங்கின் போக்குவரத்துக்குப் பிரச்னைக்குத் தீர்வுகாண மொனோ ரயில் சேவை ஒன்றை வழங்கவும் பினாங்கு பிஎன் உறுதி அளித்துள்ளது.

TAGS: