சபா, சரவாக் எம்பி-க்கள் அமைச்சரவைப் பதவிகளை நிரப்புவார்கள்

அமைச்சரவைப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக் கட்சிகளான  மசீச-வும் கெராக்கானும் முடிவு செய்ததைத் தொடர்ந்து சபா, சரவாக்கைச் சேர்ந்த புதுமுகங்கள் காலி  இடங்களை நிர்ப்புவர் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது.

tiongமே 5 பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் பிஎன் -னில் பெரிய சீனர் கட்சிகளான மசீச-வும் கெராக்கானும் அந்த முடிவைச் செய்தன.

சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கும் வகையில் சரவாக் ஜனநாயக முன்னேற்றக் கட்சி (SPDP) துணைத் தலைவரும்  பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிஎன் பின்னிருக்கை உறுப்பினர் மன்றத் தலைவருமான  தியோங் கிங் சிங் (52 வயது) அவர்களில் ஒருவர் ஆவார்.

tiong1தியோங்கைத் தவிர Parti Bersatu Sabah (PBS)வைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான 57  வயதான லிண்டா சென் ஹாவ் லின் (பத்து சாப்பி), மேரி யாப் கைன் சிங் என்ற மேரி யாப் கென் ஜின் (62  வயது) ஆகியோரும் புதுமுகங்களாக அமைச்சரவையில் இடம் பெறக் கூடும்.

அவர்களுடன் பல அம்னோ உறுப்பினர்களும் பரிசீலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. அவர்களில் 51  வயதான தெங்காரா எம்பி ஹலிமா முகமட் சாடிக், 37 வயதான அம்னோ இளைஞர் தலைவர் கைரி  ஜமாலுதின், 41 வயதான அம்னோ இளைஞர் பிரிவு தகவல் தலைவர் ரீஸால் மரைக்கான் நைனா மெரிஸான்
ஆகியோரும் இந்த முறை அமைச்சரவையில் புதியவர்களாக சேரக் கூடும்.tiong2

மூன்று முன்னாள் மந்திரி புசார்களும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகின்றது. 62 வயது ஷாஹிடான் காசிம்  (பெர்லிஸ் மந்திரி புசார்), 53 வயதான மஹாட்ஸிர் காலித் (கெடா), 58 வயது இட்ரிஸ் ஜுசோ (திரங்கானு)  ஆகியோரே அவர்கள்.

61 வயதான டாக்டர் ஜமாலுதின் ராயிஸ், 64 வயது டாக்டர் ஹில்மி யாஹ்யா ஆகிய முன்னாள் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு மீண்டும் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பெர்னாமா

TAGS: