பிஎ
ன் அலோர் ஸ்டார், நிபோங் திபால் ஆகியவற்றிலுள்ள வேட்பாளர் நியமனங்களுக்கு அருகில் பொது மக்களுக்கு ரொக்கப்பற்றுச் சீட்டுக்களை கொடுத்ததாக Pemantau எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு கூறிக் கொண்டுள்ளது.
அலோர் ஸ்டாரில் விநியோகிக்கப்பட்ட ரொக்கப்பற்றுச் சீட்டுக்களின் மதிப்பு 80 ரிங்கிட் என்றும் அந்தக் குழுவில் ஒர் உறுப்பினரான மரியா சின் அப்துல்லா நிருபர்களிடம் சொன்னார்.
Pemantau அமைப்பின் குடிமக்கள் தேர்தல் பார்வையாளர்கள் அவை வழங்கப்படுவதை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“எங்களுக்குக் கிடைத்த தகவல்களை நாங்கள் தொகுத்து வருகிறோம். வேட்பாளர் நியமன நாள் அமைதியாக முடிந்த போதிலும் பரவலாக தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை தொடக்க நிலை விவரங்கள் காட்டுகின்றன என்றார் மரியா.
ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளன்று எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் லஞ்சம் கொடுப்பதும் உணவு வழங்குவதும் நிகழ்ந்துள்ளதாக Pemantau தொண்டர்கள் அறிவித்துள்ளனர்.
என்றாலும் உணவு வழங்குவது பிரச்னை அல்ல என்றும் ஏனெனில் பிஎன் -னும் பக்காத்தான் ராக்யாட்டும் இலவசமாக உணவுகளை தங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன. அதில் பொது மக்கள் சம்பந்தப்படவில்லை என்றார் அவர்.

























