பாரிசான் வேட்பாளர் : நாடற்ற இந்தியர்களே பொறுமையாக இருங்கள்!

BN-Indians be patient1ஜொகூர், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதி பின் வேட்பாளர் நாடற்ற இந்தியர்களின் பிரச்னை விவகாரத்தில் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அத்தொகுதி இந்திய வாக்காளர்களிடம் கூறினார். இந்த விசயத்தில் அரசாங்கம் இன்னொரு சாபாவை உருவாக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றாரவர்.

சபாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களுடன் நாடற்ற இந்தியர்களை இணைத்துப் பேசிய அந்த பாரிசான் நாடாளுமன்ற BN-Indians be patient2வேட்பாளர் நோர்மலா அப்துல் சாமாட் அரசாங்கம் சாபா விவாகாரத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜொகூர், கெம்பாஸ்சில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்திருந்த 20 இந்திய வாக்களர்களிடம் பேசிய அவர், “சாபா மக்களுக்கு மிகுந்த துன்பங்களை விளைவிக்கும் அளவிற்கு நமது நாடு கறைபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இதிலிருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”, என்று விளக்கம் அளித்தார்.

பின்னர் Kini TV யுடனான நேர்க்காணலின்போது இவ்விவகாரம் குறித்து மேற்கொண்டு எதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.

“அது (குடியேற்றக்காரர்கள் நுழைந்தது) சாபாவில் நடந்த ஒன்றாகும். நாம் முயற்சிக்கிறோம்… அரசாங்கம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது என்று நான் நினைகிறேன். அவ்வளவுதான். சாபாவில் நடந்தது நமக்கு ஒரு பாடமாகும்”, என்று விளக்கம் கூறினார்.

TAGS: