அன்வாரின் புகழைக்கண்டு அஞ்சவில்லை என்கிறார் போட்டியாளர்

1anvமுன்னாள் பினாங்கு பாஸ் தேர்தல் இயக்குனர் மஸ்லான் இஸ்மாயிலிடம் பெர்மாத்தாங் பாவில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்க்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பினாங்கில் கவனத்தைக் கவரும்  இன்னொருவர் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரீஸல் நயினா மரைக்கான். அவர் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார். அத்தொகுதியின் எம்பியும் முன்னாள் பிரதமருமான அப்துல்லா அஹமட் படாவி போட்டியிடவில்லை.

1anv21anv1தம் பின்னணி பற்றி விவரிக்கும் மஸ்லான் (இடம்), 53, “நான் முன்னாள் பினாங்கு பாஸ் இளைஞர் துணைத் தலைவர். 1999-இலும் 2004-இலும் மாநில பாஸ் தேர்தல் இயக்குனராக இருந்தேன்.

“இந்த அனுபவம் பெர்மாத்தாங் பாவில் போட்டியிட என்னை ஆயத்தப்படுத்தி உள்ளது”, என்கிறார்.

1anv2மஸ்லானுக்கு நிறுவனத்துறையிலும் அனுபவமுண்டு. ஆகக் கடைசியாக அவர் தெலிகோம் மலேசியா பெர்ஹாட் (டிஎம்)-இல் உதவி தலைவராக இருந்துள்ளார். இது, அவருக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அன்வார் தலைமையில் செயல்படும் மாற்றரசுக் கூட்டணியில் குறைபாடுகளை அம்பலப்படுத்தப்போவதாகக் கூறும் மஸ்லான், “இன்ஷா அல்லாஹ், என்னால் வெற்றிபெற முடியும். ஒரு முழுநேர அரசியல்வாதியாக மக்களுக்குச் சேவை செய்ய தயாராக இருக்கிறேன்”, என்றார்.

முதல்முறையாக போட்டியிடுகிறோம் என்ற அச்சமெல்லாம் அவருக்குக் கிடையாது.  “பிஎன் அடிநிலை உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது. அதனால் அன்வாரின் புகழைக் கண்டு அஞ்சவில்லை”, என்றாரவர்.

ஜார்ஜ்டவுனில் பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, அங்கு பிஎன்னின் ஆக இளைய வேட்பாளர் லூ ஜியே செங் ஆவார் என்றார். 31வயதான அவர் ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தெங்கைப் பொருத்தவரை, இரண்டு தடவை பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் இம்முறை புக்கிட் தெங்கா செல்கிறார்.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுவதுபோல் பயந்துபோய் செபறாங் பிறை பகுதியில் ஒரு புதிய இடத்துக்குச் செல்லவில்லை என்றும் தெங் கூறினார்.

“அதற்குப் பயம் காரணமில்லை. அது கட்சித் தலைமையின் முடிவு”, என்றார்.

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலில் பிரதமர்துறை அமைச்சர் நோர் முகம்மட் யாக்கூப்பின் பெயர் விடுபட்டிருந்தது. நோர் முகம்மட் தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

-பெர்னாமா