பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது

khoo1இந்த நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட 130 நாடாளுமன்றத்  தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றதின் வழி பிஎன் அரசாங்கத்தை அமைத்துள்ளது.

அந்த மிகச் சிறிய தொகுதிகளில் 112ஐ பிஎன் வென்றது. அதனால் அதற்கு சிறிய பெரும்பான்மை கிடைத்தது என வழக்குரைஞர் அண்ட்ரூ கூ கூறினார்.

என்றாலும் பிஎன் வென்ற அந்த 112 தொகுதிகளில் பிஎன் -னுக்கு வாக்களித்தவர் எண்ணிக்கை 13வது  பொதுத் தேர்தலில் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 20 விழுக்காடு என்றும் அவர் சொன்னார்.

“அடிப்படையில் பிஎன் தேர்தலில் வெற்றி பெற்றது இப்படித் தான்,” என வழக்குரைஞர் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் இணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

 

TAGS: