இணையத்தளத்தில் தணிக்கை இல்லை என்கிறார் புதிய தகவல் அமைச்சர்

1 internet 2மாற்றரசுக் கட்சி செய்திகள் பாரம்பரிய தகவல் ஊடகங்களில் இடம்பெறுவதற்குக் கட்டுப்பாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட புதிதாக தகவல் அமைச்சராக பொறுபேற்றுள்ள அஹ்மட் சபரி சிக்,  இணையத்தில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது என்றார்.

“அவர்களின் செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை என்பது உண்மை அல்ல. பாரம்பரிய ஊடகங்களில் வருவதில்லை.

“ஆனால்,  புதிய ஊடகம் (இணையத்தளத்தில்) விரிவடைந்து வருகிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“விரும்புகிறோமோ இல்லையோ, புதிய ஊடகங்களில் அவர்களுக்கு இடம் உண்டு”, என்றாரவர். சபரி, புத்ரா ஜெயாவில் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திமிடமிருந்து அமைச்சின் பொறுப்பை ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இணையத்தளத் தணிக்கை பற்றிய வினாவுக்குப் பதிலளித்த சபரி, மற்ற நாடுகள் செய்வதுபோல் இணையத்தள சுதந்திரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது என்றார்.

சில நாடுகளில் முகநூலுக்குள் செல்லக்கூட அனுமதிப்பதில்லை. இணையத்தளத்தில் இடம்பெறுவதையெல்லாம் வடிகட்டுவார்கள் என்றாரவர்.

1 internet“நம் நாட்டில் அப்படி அல்ல. இதுவே,  நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதற்கும் இங்கு அது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கும் சான்றாகும்”.

பிரதமர் துறையும் மற்றவர்களும் வழக்கமாகச் சொல்வதைத்தான் சபரியும் சொல்லி இருக்கிறார். பக்காத்தான் ரக்யாட்டுக்கு மைய நீரோட்ட ஊடகங்களின் செய்தித்தளங்களில் இடமில்லை என்றால் என்ன, அதுதான் இணையம் இருக்கிறதே என்பார்கள். அதைத்தான் சபரியும் கூறியுள்ளார்.

நம் நாட்டில் பலருக்குத்  தூய்மையான குடிநீரும், மின்சாரமும்கூட இன்னமும் கிடைப்பதில்லை, அவற்றை அரிய ஆடம்பரப் பொருள்களாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் மலேசிய மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மட்டுமே இணைய வசதியைப் பெற்றிருக்கிறார்கள்.

பக்காத்தானில் பிகேஆரும் பாஸும் புறநகர் பகுதிகளில் செயல்படுபவை. அவை ஆடுகளம் சமமாக இருக்க, மைய நீரோட்ட ஊடக வசதி தங்களுக்கு அவசியம் என்று கருதுகின்றன.

TAGS: