பிஎன் அரசாங்கத்தில் மசீச-வின் பங்கு தொடர வேண்டும் என்கிறார் கைரி

khairyபொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என செய்துள்ள முடிவை மசீச மறுஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின்
அபு பாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மசீச-வை வாக்காளர்கள் ஆதரிக்காததால் அந்த சமூகத்தின் பேராளர்கள் இல்லாமல் பிஎன் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கூறுவதை அம்னோவில் உள்ள சில தரப்புக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்  என்றும் அந்த ரெம்பாவ் எம்பி வலியுறுத்தினார்.

மசீச-வை நிராகரித்த வாக்காளர் முடிவினால் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தும் சமரசத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தக் கட்சி தொடர்ந்து அரசாங்க நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்தக் கட்சியை வற்புறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“அவர்களை விட்டு விட்டு நமது இனத்தை மட்டும் கவனித்துக் கொள்வோம் எனச் சொல்வது நிற்க வேண்டும்.”

khairy1“சீனர்கள் பங்கேற்பு இல்லாவிட்டால் அது துயரமாக இருக்கும். ஏனெனில் அது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்,” என்று நேற்று என்டிவி 7ல் ஒளிபரப்பான ‘எண்ணங்கள்’ நிகழ்ச்சியில் கைரி பேசினார்.

அரசமைப்பில் குறிக்கப்பட்டுள்ள மொழி, கல்வி போன்ற விஷயங்களில் பிஎன் பெரும்பாலும் சம நிலையான அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த ஏற்பாடுகளை நமது தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பிரதமர் தொடர்ந்து அந்தப் பாதையை பின்பற்றி அந்த சமூகத்துடன் கலந்துரையாடல் நடத்துவார் என நான் நம்புகிறேன். நாட்டின் பாதுகாப்புக்கும் அது முக்கியமானது. ஒரே மலேசியா தொலைநோக்கை அடைவதற்கும் அது முக்கியமாகும்.”

“ஒரே வழி நடு நிலைப் பாதையாகும். நீங்கள் இன உணர்வுக்கு அடிபணிந்தால், சமரசம் ஏற்படாது.”

சீனர்களுடைய மன உணர்வுகள் எனக்குத் தெரியும். நீங்கள் அவர்களுடன் உண்மையாக கலந்துரையாடினால் அவர்களும் அவ்வாறு நடந்து கொள்வர். நீங்கள் அவர்களிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்,” என்றார் கைரி.

“சமரச நடைமுறையைத் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது”

khairy2மலாய் பெரும்பான்மை தொகுதி ஒன்றில் இனத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட வேட்பாளர் ஒருவரை பிஎன் பெயர் குறிப்பிட்டதும் தாம் ஆச்சரியப்பட்டதாக பிஎன் இளைஞர் தலைவருமான அவர் சொன்னார்.

“அது நடந்திருக்கக் கூடாது,” என்றும் கைரி கூறினார்.

“அதனால் நீங்கள் சில மலாய் வாக்குகளைப் பெறலாம். ஆனால் நீங்கள் மிதவாத மலாய்க்காரர்களுடைய ஆதரவு நீங்கள் இழக்கக் கூடும்.”

“சிலாங்கூரில் நகர்ப்புற, பகுதி நகர்ப்புறப் பகுதிகளிலும் அது தான் நிகழ்ந்துள்ளது.அங்கு நாம் மலாய் ஆதரவை இழந்து விட்டோம்,” என்றும் அவர் சொன்னார்.

ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் சின்னத்தில் நின்று தோற்றுப் போன பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் பற்றியே கைரி அவ்வாறு குறிப்பிட்டார்.

TAGS: