பிஎன் அரசாங்கம் சபாவுக்கு எண்ணெய் உரிமப் பணத்தில் 20 விழுக்காட்டுக்கு மேல் கொடுத்துள்ளது

சபாபிஎன் கூட்டரசு அரசாங்கம் சபாவுக்குக் கொடுத்துள்ள சிறப்பு நிதிகள் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அந்த மாநிலத்துக்கு கொடுப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ள 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தை விட கூடுதலானவை. இவ்வாறு அந்த மாநில பிஎன் தலைவர் மூசா அமான் கூறுகிறார்.

சபாவில் பிஎன் வெற்றி பெற்றால் அத்தகைய   கொள்கைகள் தொடரும் என அவர், சபா மாநிலத்துக்கான பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்ட போது கூறினார்.

“நாங்கள் மாநிலத்தின் நடைமுறை, மேம்பாட்டுச் செலவுகளுக்குத் தொடர்ந்து சிறப்பு ரொக்கத் தொகைகளையும்
மானியங்களையும் வழங்குவோம். அவை சபாவுக்கு எண்ணெய் வழி கிடைக்கக் கூடிய 20 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமானதாகும்,” என மூசா சொன்ன போது பலத்த கைதட்டல் எழுந்தது.

 

TAGS: