சிலாங்கூரையும் கெடாவையும் பிஎன் கைப்பற்றும் : ஃபெங் ஷுய் நிபுணர்…

13வது பொதுத் தேர்தலில் பிஎன், கூட்டரசு நிலையில் வெற்றி பெறுவதுடன் சிலாங்கூரையும் கெடாவையும் திரும்பவும் கைப்பற்றும் என பெங் ஷூய் நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார். டேவிட் கோ என்னும் அந்நிபுணர், பினாங்கில் பிஎன் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆருடம் கூறியுள்ளார். ஆனால், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகிய…

கோபால கிருஷ்ணன் பாடாங் செராயில் பிஎன் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார்

பிகேஆர் சின்னத்தில் 2008ம் ஆண்டு பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்று பின்னர் சுயேச்சை எம்பி-யாக மாறிய என் கோபால கிருஷ்ணன், வரும் தேர்தலில் பிஎன் அந்தத்  தொகுதியில் தம்மை நிறுத்த வேண்டும் என விரும்புகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் அந்தத் தொகுதியில் கடுமையாக…

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தாலாட்டு பாடினார் முஹிடின் யாசின்!

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களைத்  துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிடின் யாசின் இன்று சந்தித்தார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில், பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்விற்குச் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். தனதுரையில் சந்திப்பின் நோக்கத்தை விளக்கிய முஹிடின், நாட்டின்…

பிஎன் பத்து நடவடிக்கை மையத் திறப்பு விழாவில் தகவல் துறை…

நேற்று நடைபெற்ற கோலாலம்பூர் பத்து நாடாளுமன்றத் தொகுதி பிஎன் தேர்தல் தளபத்திய மையத்தின் திறப்பு விழாவுக்கு  உதவியாக தகவல் துறைக்குச் சொந்தமான மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்க எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்…

மாற்றம் காண நாம்தான் மாற வேண்டும்!

பொதுவாகவே அறிவு ஜீவிகளின் கவலை விசித்திரமானது. அவர்கள் முடிவு எடுக்கும் முன் மிகவும் குழம்புவார்கள். எளிய மனிதர்கள் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிகிறது. விழிப்புடன் சமுதாயத்தைப் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் செம்பருத்தி.கொம் எளிய மனிதர்களை நோக்கி ஒரு நேர்காணலை மேற்கொண்டது. (காணொளியை பார்வையிட…

குவான் எங்கை எதிர்த்துப் போட்டியிட தெங் தயார் ஆனால், ஒரு…

பினாங்கு  பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, முதலமைச்சர் லிம் குவான் எங்கின் சவாலை ஏற்று அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார்.  ஆனால், அப்போட்டி பிஎன் தேர்வு செய்யும் இடத்தில் நடக்க வேண்டும். “பாடாங் கோத்தாவில் போட்டியிடுவோம் என்று லிம் விடுத்துள்ள அழைப்பை ஏற்கிறேன்.  இடத்தை அவரே குறிப்பிட்டதற்கும்…

‘பினாங்கை மீண்டும் கைப்பற்ற பிஎன்-னுக்கு உயர்ந்த தார்மீக வலிமையும் ஒற்றுமையும்…

வரும் பொதுத் தேர்தலில் பினாங்கைக் கைப்பற்றுவது மிகவும் கடுமையான பணியாக இருக்கும் என்பதை  பினாங்கு பிஎன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. காரணம் பிஎன் கூட்டணி மீது அந்த மாநிலத்தில் நிலவும் உணர்வுகளை அது புரிந்து கொண்டுள்ளதாகும். "அந்தப் பணி கடுமையானது. மக்கள் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். என்றாலும்…

முகைதின்: 2008 வீழ்ச்சிக்கு பிஎன்-னின் எல்லாக் கட்சிகளையும்தான் குறை சொல்ல…

2008 தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு அம்னோவே அடிக்கடி குறை சொல்லப்பட்டாலும் மற்ற பங்காளிக்கட்சிகளுக்கும் அதில் பங்குண்டு என அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். “பிஎன்னின் பிம்பம்  சிதைந்ததற்கு அம்னோ மட்டும் காரணம் அல்ல. மற்ற பங்காளிக் கட்சிகளும்தான் காரணம். அவற்றில் சில நம்மைவிட பெரிய பிரச்னைகளை…

பிஎன் 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் கூறுகிறார்

பாரிசான் நேசனல்(பிஎன்), எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் 160 நாடாளுமன்ற இடங்களை வென்று மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், 2008 பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சிகளிடம் இழந்த மாநிலங்களைத் திரும்பக் கைப்பற்றும் ஆற்றலும் அதற்குண்டு…

பிஎன் மார்ச் 8-இல், பராமரிப்பு அரசாக மாறும்

கருத்துக்கட்டுரை: TOMMY THOMAS நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் ஐந்தாண்டுகள். அரசமைப்பின் சட்டவிதி 55(3) கூறுகிறது: ‘நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம் இல்லையேல் அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தொடரும். அதன்பின் கலைக்கப்படும்.’ நடப்பு நாடாளுமன்றம் 2008, ஏப்ரல் 28-இல் முதல் கூட்டத்தை நடத்தியது என்பதால் 2013, ஏப்ரல்…

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகின்றது

பாரிசான் நேசனல் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு இப்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரியான நேரத்தில் அதனை வெளியிடுவார் என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார். வெற்று வாக்குறுதிகளை வழங்கும் எதிர்க்கட்சிகளைப் போல் அல்லாமல்…

பிஎன் ஆதரவு இணையத் தளத்திலிருந்து EIU அறிக்கை எடுக்கப்பட்டது

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்மையில் பெர்னாமா வெளியிட்ட அறிக்கை இரண்டு வாரங்களுக்கும் முன்பு இன்னொரு செய்தி இணையத் தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான கட்டுரையைப் போன்று உள்ளது. பிப்ரவரி 21ம் தேதி வெளியான அந்த பெர்னாமா கட்டுரை The Choice எனப்படும் பிஎன் ஆதரவு…

பெர்சே: தேர்தல் பரப்புரை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை

தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, பரப்புரைக்கான காலம் ஒதுக்கப்படுவதற்குமுன்பே பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜோகூர் பாருவில், ‘Undilah Barisan Nasional’(பிஎன்னுக்கு வாக்களியுங்கள்) என்ற சொற்களுடன் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.…

கர்பால் : பினாங்கு மக்கள் பிஎன்-னை நிராகரிப்பது தெளிவாகி விட்டது

பினாங்கில் நேற்று நடைபெற்ற பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது பிஎன் -னுக்குத் தயாரா என பினாங்கு மக்களைக் கேட்ட பிரதமர் நஜிப் ரசாக்கை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். நஜிப் எழுப்பிய கேள்விக்கு கூட்டத்தினர் அளித்த பதில் பினாங்கு மக்கள் பிஎன் -னை…

லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்

அடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும். ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் - யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி…

கிறிஸ்துவர்கள் பாரிசானின் ‘பாதுகாப்பான வைப்புத் தொகைகள்’ அல்ல!

சபா, சரவாக்கில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டினரான கிறிஸ்துவ வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது. அதனால் தனது 'பாதுகாப்பான வைப்புத் தொகைகள்' என பிஎன் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்ளும் அந்த இரு மாநிலங்கள் மீதான பிஎன் பிடிக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளது. யூகேஎம் என்ற மலேசிய…

‘ஜாசா-வின் பரப்புரை அரசுப்பணம் தவறாக செலவிடப்படுவதற்கு ஓர் எடுத்துக்காட்டு’

எம்பி பேசுகிறார்- லிம் கிட் சியாங் நேற்றிரவு டிவிட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தேன்: “தொழிலாளர் கட்சியின் லீ லி லான் சிங்கப்பூர் புங்கோல் ஈஸ்ட் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் 3182 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மக்கள் செயல் கட்சி(பிஏபி) க்கு எதிராக வெற்றிபெற்றுள்ளார். அதனால் நஜிப் 13வது…

‘தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுதல் என்பது “நடவாத காரியம்” என்று கூறும் ஓர் ஆய்வு அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகலாம் என்றும் கூறுகிறது.. யுனிவர்சிடி மலாயா ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) முந்தைய தேர்தல் முடிவுகளையும் நடப்பு…

இராமசாமி: பிறை ஆர்ப்பாட்டம் பிஎன் கையாள்களின் வேலை

சில கும்பல்கள் பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமிக்குக் குழிபறிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு வந்த குறுஞ்செய்தி நிபோங் திபால், பிறை, பாகான் டாலாம் ஆகியவற்றைச் சேர்ந்த டிஏபி உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 பேர் கட்சித் தேர்தலில் வாக்குகள் தப்பாகக் கணக்கெடுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

இந்திய சமுதாயம் இலவச அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது!

இந்தப் படம் நேற்று செமின்ஞியில் பிரதமர் நஜீப் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலவச அரிசி பொட்டலங்கள் கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். ஒரு அரிசி பொட்டலத்துக்காக இந்தியர்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர். இந்த நிலமை மாற வேண்டும்.…

சிலாங்கூர் பிஎன்: கேஎல்112 பங்கேற்பாளர்கள் ‘கட்சி ஊழியர்கள்’

நேற்று நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டது பற்றி சிலாங்கூர் பிஎன் கவலைப்படவில்லை. மாறாக பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்சி ஊழியர்கள் என அது கூறியது. "நாங்கள் கவலைப்படவில்லை. அதற்கு மிகவும் எளிதான காரணம் இது தான்: அந்தக் கூட்டத்தில்…

பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள்

13ஆவது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேசனலின் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்கள் மற்றும் இதர குற்றங்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று காணப்பட்டுள்ளது என்று பாரிசான் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கான 222 மற்றும் சட்டமன்றங்களுக்கான 505 இருக்கைகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் "பரிசுத்தமானவர்கள்" என்பதை…

தாப்பா பிஎன்: நாங்கள் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு ‘கற்றுக் கொடுத்தோம்’.

பேராக் தாப்பாவில் உள்ள ஒராங் அஸ்லி வாக்காளர்கள் பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்கு வழி காட்டும் வகையில்  ஆளும் கூட்டணியும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் 'பயிற்சி வகுப்புக்களை' நடத்துவதாக பிகேஆர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை பிஎன் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார். தாப்பா பிஎன் தலைவரும் ஆயர் கூனிங்…