குவான் எங்கை எதிர்த்துப் போட்டியிட தெங் தயார் ஆனால், ஒரு நிபந்தனை….

1bnபினாங்கு  பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, முதலமைச்சர் லிம் குவான் எங்கின் சவாலை ஏற்று அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார்.  ஆனால், அப்போட்டி பிஎன் தேர்வு செய்யும் இடத்தில் நடக்க வேண்டும்.

“பாடாங் கோத்தாவில் போட்டியிடுவோம் என்று லிம் விடுத்துள்ள அழைப்பை ஏற்கிறேன்.  இடத்தை அவரே குறிப்பிட்டதற்கும் அத்துடன் நான் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கும் சம்மதமே என்று கூறியுள்ள பெருந்தன்மைக்கும் நன்றி.

“கடந்த நான்கு தேர்தல்களில் டிஏபிதான் நிபந்தனைகளை விதித்து வந்துள்ளது.  இப்போது பிஎன் நிபந்தனைகளை முன்வைக்கும்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெங் கூறினார்.

“இத்தேர்தலும் கொள்கைகள் மீதான போட்டிதானே தவிர ஆளுமைகளுக்கிடையிலான போட்டி அல்ல.  எனவே, போட்டியிடும் இடம் பினாங்கின் சூழலைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

“லிம் சட்டமன்றத்துக்கான தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும். என் எளிய நிபந்தனையை லிம் ஏற்றுக்கொண்டால் போட்டியிடுவதற்கான இடத்தை நான் அறிவிப்பேன்”, என்றாரவர்.

அவர் தேர்வு செய்யும் இடம் பாடாங் கோத்தாவாக இருக்குமா என்று வினவியதற்கு “அது எதுவாகவும் இருக்கலாம்” என்றார்.

 

 

TAGS: