முகைதின்: 2008 வீழ்ச்சிக்கு பிஎன்-னின் எல்லாக் கட்சிகளையும்தான் குறை சொல்ல வேண்டும்

11umno2008 தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு அம்னோவே அடிக்கடி குறை சொல்லப்பட்டாலும் மற்ற பங்காளிக்கட்சிகளுக்கும் அதில் பங்குண்டு என அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

“பிஎன்னின் பிம்பம்  சிதைந்ததற்கு அம்னோ மட்டும் காரணம் அல்ல. மற்ற பங்காளிக் கட்சிகளும்தான் காரணம். அவற்றில் சில நம்மைவிட பெரிய பிரச்னைகளை எதிர்நோக்கின”, என்றாரவர்.

11umno1அவர் இன்று புத்ரா ஜெயாவில், அம்னோவின் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் ஆகியோரடங்கிய ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

ஒரு இரகசிய கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு கூடியிருந்தனர். கலந்துரையாடலுக்குமுன் ஆற்றிய உரையில் துணைப் பிரதமருமான முகைதின், 2008 தேர்தல் வீழ்ச்சிக்கு அம்னோவை மட்டும் குறைகூறக்கூடாது என்றும் ,மற்ற கட்சிகளும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

பிஎன் துணைத் தலைவருமான முகைதின், கெராக்கான், மசீச, மஇகா ஆகியவை பல இடங்களில் தோற்றுப்போனதைச் சுட்டிக்காட்டினார்.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அக்கட்சிகளும் அம்னோ செய்ததை போன்ற சீரமைப்புகளைச் செய்து பிஎன்னை வலுப்படுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

 

TAGS: