இந்திய சமுதாயம் இலவச அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது!

indians_BNஇந்தப் படம் நேற்று செமின்ஞியில் பிரதமர் நஜீப் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலவச அரிசி பொட்டலங்கள் கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாகும். ஒரு அரிசி பொட்டலத்துக்காக இந்தியர்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டனர். இந்த நிலமை மாற வேண்டும். மாற்றம் என்பது வந்தே ஆக வேண்டும்.

இந்தியர்களை பிச்சைக்காரர்களாக கையேந்த வைக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மலேசிய அரசியலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். ஏன் இந்தியர்களுக்கு மட்டும் இந்த நிலமை? சீனர்கள் அல்லது மலாய்காரர்களுக்கு இப்படி அரிசி அல்லது உணவு பொட்டலங்களோ கொடுப்பது கிடையாது. ஆனால், இந்தியர்களுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட கேவலமான நிலமை.

5 கிலோ அரிசியால் அந்த குடும்பத்துடைய நிலமை மாறி விடுமா அல்லது அக்குடும்பம்தான் முன்னேறி விடுமா?? இப்படிப்பட்ட முட்டாள் அரசியல் தலைவர்கள் மற்றும் முட்டாள் அரசியல் கட்சிகள் இந்தியர்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் அதுவும் குறிப்பாக தமிழர்களை வைத்து பிச்சைக்காரர்கள் போல் நெருவில் கையேந்த வைப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் கேட்பதோ உரிமை; பிச்சை அல்ல!

முகநூலில் இடம்பெற்ற சில கருத்துப் பதிவுகள்…

சரளா கங்காதரன்: இந்தியர்கள்தான் முதலில் மாற வேண்டும் ஏனெனில் இவர்கள்தான் எங்கேல்லாம் இலவசமாக கிடைக்கின்றதோ அங்கேல்லாம் தென்படுக்கின்றார்கள். எப்போது இது எல்லாம் எங்களுக்குத் தேவையில்லை; கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறுக்கிறார்களோ அன்று தான் நம் சமுதாயத்தின் மேலான பார்வை மாறும். இந்தியர்களே நாம் ஏழைத்தான் ஆனால் பிச்சைக்காரர்கள் அல்ல.

இந்த சூழ்நிலையைத்தான் அரசியல்வாதிகள் தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். என்ன செய்வது? இங்கே நிற்பவர்கள் எல்லாரும் 5 கிலோ அரிசி வாங்க வசதி இல்லாதவர்களா? இதுதான் என் கேள்வி. இது மாற வேண்டும்.

Neo Bleu : ஏழை இந்தியர்களின் வாழ்க்கை தரம் மாற வேண்டும். பாரிசன் மட்டுமல்ல பக்கத்தான் அரசியல்வாதிகளும் ஹம்பர் கலாச்சாரத்தை தொடர்கின்றனர். அடுத்த தேர்தலில் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுவது அவசியம். கண்மூடித் தனமாக யாரையும் ஆதரிக்காதீர்கள். அவர்கள்தான் நம்மை நடுத்தெருவில் நிற்க வைக்கின்றனர். எந்த அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த ஏழை சமுதாய வாழ்கைத் தரம் மாற என்ன திட்டம் வைத்துள்ளனர் என்று கேள்வி கேளுங்கள்.

ஏழ்மையில் உழலும் இவர்களது வாழ்க்கைத் தரம் மாற நம்மை போன்றவர்கள் நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இவர்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளனர் என்பதனை தெரிந்து கொண்டுதான் அவர்களை ஆதரிப்போம் என நாம் விடாபிடியை இருந்தால் கண்டிப்பாக சிறு மாற்றமாவது வரும் நம்மவர்களின் வாழ்வினில்.

சமுதாய கடப்பாடுகளை மறந்து, தான் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்திற்கு கண்மூடித்தனமான ஆதரவு வழங்கும் தொண்டனும், “அந்த தலைவன் ஏன் கேட்கவில்லை, இந்த தலைவன் ஏன் பேசவில்லை” என்று தேநீர் கடையில் அமர்ந்து வெட்டிக் கதைப் பேசி திரியும் பாமரன் வரை அனைவருக்கும் இதில் சமப் பங்கு உண்டு.

மோகன் பெருமாள்: யார் குற்றம்? அம்னோவின் குற்றமா? சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்கும் சமூகத்தின் குற்றமா?

யசோதா சுப்பிரமணியம்: சுயநலவாதிகள்  பலரால்  சமுதாயத்திற்கு  அவமானம். ‘தமிழன் என்று  சொல்லடா தலை  நிமிர்ந்து  நில்லடா’  என்ற  காலம் போய்… ‘தமிழன்  என்று  சொல்லடா  கை ஏந்தி  நில்லடா என்ற  காலம்  வந்து  விடுமோ’ என்ற  பயம்  கவ்விக் கொண்டு விட்டது. ஒரு கிலோ அரிசிக்கா கை ஏந்தும் அளவுக்கு  நாம்  தாழ்ந்து  விட்டோம்? இதற்குமேலும் இந்திய சமுதாயம் திருந்த  வில்லை என்றால் யாரையும்  குறை சொல்வதற்கில்லை; இந்திய  சமுதாயத்திற்கு  இந்தியர்களே தேடிக் கொண்ட சாபக்  கேடு…!!!

நந்தினி வாசுதேவன் : பிச்சை எடுப்பவர்கள் இருக்கும் வரை, பிச்சை போடுபவர்கள், பிச்சை போட்டு கொண்டுதான் இருப்பார்கள்…!

சொக்கலிங்கம் கருப்பையா : திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொன்டே இருப்பான். நம் சமுதாயம் இன்று இந்த நிலையில் இருக்க மிகப்பெரிய காரணம் ஒருவகையில் அரசியல்வாதிகளாக இருந்தாலும், பலவகையில் நாமே காரணம். கொட்ட கொட்ட குணிந்தது நம் குற்றமே. இதை ஒப்புக்கொண்டு செய்த தவறை மீண்டும் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்.

தமிழ் முத்தையா : ஒரு சிலருக்கு தனக்கே வழியக்காணோம். ஊர் கதைப் பேசுகிறார்கள். போய் வாங்க  வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே. கருத்து கூறுவது சுலபம். உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தமா?

நம்ம  சமுதாயத்திற்கு  இறங்கி  வேலை  செய்து  பாருங்கள் தெரியும் வருத்தம். சுமையென நினைத்து ஒதுங்கிக்கொண்டு பல பேர் கருத்து சொல்லிக்கிட்டு இருக்கிறார்கள். சுகம் என நினைத்து செய்து பாருங்கள்.

அருள்குமார் ஜம்புநாதன் :  உதவி செய்ய வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை. உதவி என்ற பெயரில் பிச்சை போட வேண்டாம் என்றுதான் சொல்கின்றோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அதுவும் ஒரு நிகழ்ச்சிக்கு ஆட்களை திரட்டுவதற்கு அரிசு கொடுக்கிறேன், பால் மாவு கொடுக்கிறேன் என்று சொல்லி அந்த இடத்தில் தமிழர்களை கை ஏந்த வைக்காதீர்கள். ஏன் இந்த நிலமை சீனர்களுக்கும் மலாய்காரர்களுக்கும் நடக்கவில்லை என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உண்மைத் தமிழனாக இருந்தால் இந்த படத்தில் பல தமிழர்கள் தெருவில் கையேந்தி நிற்கும் படத்தை பார்க்கும் போது அவர்களுடைய நெஞ்சு வலிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

இங்கே கிடைக்கிறது அல்லது கிடைக்க வில்லை என்று யாரும் வருத்தப்படவில்லை. ஆனால், இந்திய சமுதாயம் 5 கிலோ அரிசிக்காக தெருவில் கையேந்தி நிற்கின்றது என்ற நிலமையை கண்டுதான் வருத்தப்படுகிறோம்…!

TAGS: