பிஎன் ஆதரவு இணையத் தளத்திலிருந்து EIU அறிக்கை எடுக்கப்பட்டது

GEஎதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அண்மையில் பெர்னாமா வெளியிட்ட அறிக்கை இரண்டு வாரங்களுக்கும் முன்பு இன்னொரு செய்தி இணையத் தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான கட்டுரையைப் போன்று உள்ளது.

பிப்ரவரி 21ம் தேதி வெளியான அந்த பெர்னாமா கட்டுரை The Choice எனப்படும் பிஎன் ஆதரவு இணையத்தளத்தில் பிப்ரவரி 9ம் தேதி வெளியான கட்டுரையின் பிரதி போல இருப்பது மலேசியாகினி மேற்கொண்ட சோதனைகள் வழி தெரிய வந்துள்ளது.

பெர்னாமா வெளியிட்ட அந்தக் கட்டுரையின் மதிப்பு, முக்கிய நாளேடுகளிலும் மலேசியாகினி உட்பட இணைய ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. வாசகர் ஒருவர் அந்தக் கட்டுரை The Choice இணையத் தளத்தில்  வெளியான கட்டுரையைப் போன்று இருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த இரண்டு கட்டுரைகளும் EIU என்ற எக்கானாமிஸ்ட் சஞ்சிகையின் வேவுப் பிரிவை மேற்கோள் காட்டி வரும் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் சாத்தியம் இருப்பதாக கூறின.

இரண்டு கட்டுரைகளையும் அணுக்கமாக ஆய்வு செய்த போது The Choice இணையத்தில் சேர்த்த பதிப்புடன் மேலும் மூன்று பத்திகளை பெர்னாமா இணைத்துள்ளது தெரிய வந்தது.

அத்துடன் குறைந்தது மூன்று சொற்றொடர்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றவை ’13வது பொதுத் தேர்தல்’ என்பது ‘தேர்தல்கள்’ என மாற்றப்பட்டது போன்ற சிறிய மாற்றங்களாகும்.

பக்காத்தான் ராக்யாட்டை பிஎன் குறை கூறும் பகுதிகளுக்கு தவறுதலாக அந்த EIU என்ற எக்கானாமிஸ்ட் சஞ்சிகையின் வேவுப் பிரிவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அடையாளம்  தெரியாத எழுத்தாளர்கள் நடத்தி வரும் EIU, The Choice  ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பெற மலேசியாகினி முயன்றது. ஆனால் அவற்றின் பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.

GE1பெர்னாமா அந்தப் புகாரை விசாரிக்கும்

இதனிடையே அந்த விவகாரத்தை கவனிப்பதாக பெர்னாமா தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங் வாக்குறுதி  அளித்துள்ளார். அதனுடன் மலேசியாகினியின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இரண்டு நிகழ்வுகளில் படங்களை ஜோடித்ததாக  தேசிய செய்தி நிறுவனமான அதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து

கொண்டனர் என்னும் தோற்றத்தை தரும் வகையில் அந்தப் படங்கள் ஜோடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம்  தேதி  அந்த முதல் குற்றச்சாட்டை மறுத்த யோங் பின்னர் செப்டம்பர் 20ம் தேதி அந்தக் குற்றச்சாட்டு உண்மையென ஒப்புக் கொண்டார்.

இரண்டாவது சம்பவத்தை சதிநாச வேலை எனக் குறிப்பிட்ட அவர் “நாங்கள் அந்த விஷயத்தைக் கடுமையாகக்  கருதுகிறோம். அந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்,” என்றும் கூறினார்.

“பெர்னாமா எப்போதும் உயரிய தொழில் நிபுணத்துவத் தரங்களை பராமரித்து வருகின்றது என்றும் பணிமனை நேர்மையை முக்கியமாகக் கருதுகின்றது,” என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: