13ஆவது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேசனலின் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்கள் மற்றும் இதர குற்றங்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று காணப்பட்டுள்ளது என்று பாரிசான் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார்.
நாடாளுமன்றத்திற்கான 222 மற்றும் சட்டமன்றங்களுக்கான 505 இருக்கைகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் “பரிசுத்தமானவர்கள்” என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக போலீஸ், ஊழல்-எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) மற்றும் திவால் இலாகா ஆகியவற்றின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். எவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அட்னான் கூறினார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வேட்பாளர்களின் பின்னணியும் கவனமாக ஆராயப்பட்டது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.