பொதுவாகவே அறிவு ஜீவிகளின் கவலை விசித்திரமானது. அவர்கள் முடிவு எடுக்கும் முன் மிகவும் குழம்புவார்கள். எளிய மனிதர்கள் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிகிறது. விழிப்புடன் சமுதாயத்தைப் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் செம்பருத்தி.கொம் எளிய மனிதர்களை நோக்கி ஒரு நேர்காணலை மேற்கொண்டது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)
அவர்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தும் நமது சமுதாயம் இன்னும் பண அரசியலுக்குச் சோரம் போகவில்லை என்பதற்கான அடையாளம்.
பலர் தங்கள் கருத்துகளை பயத்தின் காரணமாக முன்வைக்கத் தயங்கினார்கள். ஆனால் பலர் பண அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தனர். இன்னும் சொல்லப்போனால், தங்களின் அடிப்படையான தேவைகளையும் அவர்களால் உணர முடிந்திருந்தது. ஒரு சிக்கலை வெறும் சிக்கலாகப் பார்க்காமல் அதன் பின் நிகழும்; நிகழ்ந்த அரசியல் புறக்கணிப்புகளையும் அவர்களால் உணர முடிந்திருந்தது.
ஒரு மாது, அவர் வணிகம் செய்யும் தெருவில் அடிக்கடி திருடு நடப்பது வேலையின்மையின் காரணமாகத்தான்; வேலை வாய்ப்பை ஏற்படுத்தாதது யாரின் குற்றம் என வினவியபோது அவரால் விளிம்பு நிலை மனிதர்களின் நியாயங்களை உணர முடிந்துள்ளது வெளிப்படையானது. பாரிசான் அரசாங்கம் பணக்கார வர்க்கத்துக்காக மட்டுமே இயங்கியது என்பது அவர் பேசியதுபோது வெளிப்பட்டது.
அதோடு ஒரு பெரியவர், இன்னமும் அரிசி, பருப்புக்காக ஓட்டு போடும் நிலையில் பாரிசான் அரசு இந்திரயர்களை வைத்திருப்பதைச் சாடினார்.
மேலும் ஒருவர் குடும்ப அரசியல் தொடர்பாக பேசினார். அதோடு மாற்றம் என்பதை தன் வாழ்நாளில் நிச்சயம் காண வேண்டும் என அவர் கூறியது எளிய மக்களின் குரலாக ஒலித்தது. அதோடு நஜீப்பின் பொய் முகத்தை நம்ப யாரும் தயாராக இல்லை என்பதை உணரமுடிந்தது.
ஒரு பெரியவர், கிடைத்த 500 ரிங்கிட்டை தான் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதை தெளிவாக்கினார். 500 ரிங்கிட் என்பது 50 வருடத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற போது அவ்வெண்ணிக்கை சிறிதாகிப்போனது.
பெரும்பாலோரின் “கருத்து மாற்றம் கொடுத்து பார்ப்போம். எப்படி இருக்கிறது என ஆராய்வோம். சரி இல்லை என்றால் மீண்டும் தேர்தலில் கட்சியை மாற்றலாம் ” என்றனர் துணிவாய்.
ஆக, விழித்துக்கொண்ட சமுதாயத்தை நஜீப்பின் பண அரசியல் இன்னும் ஏமாற்ற முடியாது. எல்லோரும் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர்.
எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை??
500 பில்லின் கடனில் மலேசியா? வெட்ககேடு!!!