முன்னாள் நீதிபதி அப்துல் காடிரை சபாநாயகராக பாக்கத்தான் முன்மொழிகிறது

பக்கத்தான் ராக்யாட் ஏகமனதாக முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் காடிர் சுலைமானை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி அப்துல் கடீரின் நியமனத்தை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான காலிட் இப்ராகிம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது என்று…

சைபுடினின் புதிய பணி ‘இன்னும் விளக்கப்படவில்லை’

சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பிகேஆர் கட்சியின் அரசியல் தொடர்பு  அதிகாரி என்ற ரீதியில் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனின்  கடமைகள் என்ன என்பது இன்னும் சிலாங்கூர் பிகேஆர்-ருக்கு  தெரிவிக்கப்படவில்லை. "அவருடைய பணிகள் பற்றிய விவரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சிலாங்கூர்  பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி இங்கு…

நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தில் பக்காத்தான் எம்பிகள் கலந்துகொள்ளவில்லை

இன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தைப் புறக்கணிப்பதுபோல் பக்காத்தான் ரக்யாட்டின் 89 எம்பிகளில் 88 பேர் அக்கூட்டத்துக்குச் செல்லவில்லை. எதிர்த்தரப்பிலிருந்து ஒரே ஒருவர் மட்டும், டிஏபி-இன் பக்ரி எம்பி எர் தெக் வா மட்டுமே, அதில் கலந்து கொண்டார். விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

தேர்தல் ஆணையத்துக்குப் புதியவர்கள் தேவை: பக்காத்தான்

முதலில் தேர்தல் ஆணைய (இசி) உறுப்பினர்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் இசி-யை மேற்பார்வை செய்யும் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்கிறது பக்காத்தான் ரக்யாட். “புதிய ஆணையம் அமைக்கப்படும்வரை இசி-மீது நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளிலும் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் பணிகளிலும் பக்காத்தான் ஒத்துழைக்காது”, என பிகேஆர் உதவித்…

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் டிஏஎபி-க்கு மூன்று இடங்கள்தான்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில், டிஏபியும் பிகேஆரும்  தலா மூன்று இடங்களையும் பாஸ் நான்கு இடங்களையும் பெற்றிருக்கும். சிலாங்கூர் சுல்தான், ஆட்சிக்குழுவில் 10 பேரில் அறுவர் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதால் டிஏபிக்கு ஏற்கனவே உறுதிகூறியதுபோல் நான்கு இடங்கள் கொடுக்க முடியவில்லை என சிலாங்கூர் பக்காத்தான் ரக்யாட் வட்டாரங்கள்…

தியன், தாம்ரின், ஹேரிஸ் மீண்டும் கைது

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காஃபார் மற்று எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய தாம்ரின், போலீசார் தமது வீட்டிலிருப்பதாகவும், அவர்கள் இரவு மணி 7.5 க்கு தமது வீட்டிற்கு…

ஆட்சிக்குழுப் பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல்

சிலாங்கூரில் 2013-18 தவணைக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல்  கொடுத்திருப்பதாக  மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார். இதனை அடுத்து  நாளைக் காலை மணி 9.30க்கு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்   கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி…

‘சீரமைப்புக்காக பெரும்பான்மை மக்களுடன் பிஎன் ஒத்துழைக்க வேண்டும்’

தேசிய இணைக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் பிஎன் முதலில் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்த “பெரும்பான்மை மக்களுடன்’ ஒத்துழைக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் அசிசான் வான் இஸ்மாயில் வலியுறுத்தினார். “இணக்கம் காண்பதற்குமுன் பெரும்பான்மை மக்களின் குரல் என்ற முறையில், அரசியல் சீரமைப்பு, தேர்தல் சீரமைப்பு, நாடாளுமன்ற…

தியான் சுவா, தாம்ரின், ஹேரிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் உறுப்பினர் தாம்ரின் காஃபார் ஆகியோரை போலீஸ் ரிமாண்டில் வைப்பதற்கு இன்று போலீஸ் செய்து கொண்ட மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்படவிருக்கின்றனர். அந்த மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு தயாராகிக்…

மாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களின் பிரதிகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்

மாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களான ஹராகாவையும் சுவாரா அடிலானையும் உள்துறை அமைச்சு பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. பல மாநிலங்களில் அது நிகழ்ந்துள்ளது. மலாக்கா, நெகிரி  செம்பிலான், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சியின் செய்தித்தாளான ஹராகா டெய்லி பறிமுதல் செய்யப்பட்டதென  ஹராகா இணையச் செய்தித்தளம் கூறியது. அந்த…

மூன்று பக்காத்தான் தலைவர்கள் கைது!

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும்  இன்று பிற்பகல் தனித்தனியே கைது செய்யப்பட்டனர். கோலாலும்பூரில் தேர்தல் மோசடி-எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறிது நேரம் கழித்து முன்னாள் பத்து பெரண்டாம்…

ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் மூவர் யார்?

மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட். வழக்கு, நீதிமன்றம் கொண்டுசெல்லப்படும்போதுதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமாம். அம்மூவர் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்…

பேரணிக்கு முக்ரிஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது ‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’

புதிதாக பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், மாநில மக்களுக்குள்ள பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் பக்காத்தான் ரக்யாட் நாளை ‘கறுப்பு 505’ பேரணியை சுகா மெனாந்தி அரங்கில் நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கெடாவில் ஜனநாயக உரிமைகள்…

காலித் : நான் பலவீனமான மந்திரி புசார் அல்ல

சிலாங்கூர் அரசாங்கத்திற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்றுள்ள தாம் பலவீனமான  மந்திரி புசாராக இருக்கப் போவதில்லை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தாம் 'ரிபார்மஸி' மனிதர் என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்ட அவர், தமது கடமையில் கௌரவமாக நடந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.…

போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பக்காத்தான் பேரணியில் 60,000 பேர் பங்கேற்றனர்

போலீஸ் சட்டவிரோதமானது என எச்சரிக்கை விடுத்தும் பினாங்கு எஸ்பிளனேட்டில் 'நன்றி தெரிவிக்கும்'  பொருட்டு பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கம் நேற்றிரவு நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள்  கூடினர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் கறுப்பு உடையை அணிந்திருந்தார்கள். மே 5 தேர்தலில் மோசடிகளும் வாக்குகளை…

விளக்கமளிக்க வருமாறு இசி தலைவருக்கு பிகேஆர் அழைப்பு விடுக்கும்

அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் சவால் விடுத்ததை அடுத்து பக்காத்தான் ரக்யாட், பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும்  முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்புக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது. இன்றைய பக்காத்தான் செயலக மன்றக் கூட்டத்தில்…

‘பக்காத்தான்-ஆதரவு சீன நிறுவனங்களைப் புறக்கணிப்பீர்’: என்ஜிஓ-கள் வலியுறுத்தல்

13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு நிதியுதவி செய்த சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை மலாய் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று சில இஸ்லாமிய என்ஜிஓ-கள் வலியுறுத்தியுள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் செயல்களால் நாட்டில் ஒற்றுமை குலைந்து விட்டதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் (இடம்)…

காலித் சிலாங்கூர் மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று காலை மணி  10.10 வாக்கில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். கிள்ளானில் உள்ள இஸ்தானா அலம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் ஷா முன்னிலையில் அவர் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.…

‘கறுப்புப் பேரணிகள் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என வருணனை’

அண்மைய பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு பக்காத்தான் ராக்யாட் நடத்தும்  'கறுப்புப் பேரணிகள்' வன்முறையானதுடன் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என அம்னோவுக்குச் சொந்தமான  உத்துசான் மலேசியாவும் அம்னோவுடன் தொடர்புடைய பெரித்தா ஹரியானும் வருணனை செய்துள்ளன. 'சட்ட விரோதப் பேரணிகளில் இளம் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்' என…

பினாங்கு பக்காத்தான் தேர்தல் வேட்பாளர்கள் எம்ஏசிசி-யிடம் புகார் செய்தனர்

பினாங்கில் 13வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பத்து பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் ஊழல்  நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார்  செய்துள்ளனர். அவர்களில் எழுவர் பினாங்குத் தீவிலும் மூவர் தலைநிலத்திலும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என  அவர்களுடைய பேச்சாளரும் பாயான் பாரு…

ஈப்போ கறுப்பு 505 பேரணியில் 30,000 பேர் கலந்து கொண்டனர்

கோலாலம்பூரிலும் பினாங்கிலும் வெற்றிகரமாக கறுப்பு 505 பேரணிகள் நடத்தப்பட்ட பின்னர் தேர்தல்  மோசடிகள் எனக் கூறப்படுவதற்கு எதிராகத் துக்கம் அனுசரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஈப்போ, மேடான்  இஸ்தானாவில் நடைபெற்ற பேரணியில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பேர் கலந்து கொண்டார்கள். அந்த எண்ணிக்கை பெரும்பாலும் 30,000-ஆக இருக்கலாம் என நேரில்…

ஈப்போவில் இன்றிரவு ‘Bantah 505’ பேரணிக்கு போலீஸ் அனுமதி இல்லை

பேராக் மாநிலத்தில் 'Bantah 505' கூட்டத்தை நடத்துவதற்கான விண்ணப்பத்தை போலீசார் அங்கீகரிக்கவில்லை  என அந்த மாநில போலீஸ் தலைவர் முகமட் சுக்ரி டாஹ்லான் கூறியிருக்கிறார். காரணம் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் நிபந்தனைகளை அது பூர்த்தி செய்யவில்லை என்றார் அவர். கூட்டம் நிகழ்வதற்கு பத்து நாட்கள் முன்னதாக ஏற்பாட்டாளர்கள்…

மந்திரி புசார் பதவி தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் கட்சித்…

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பதை முடிவு செய்யும் போது சிலாங்கூர் பிகேஆரின் கருத்துக்களை ஒதுக்கி விட்டதாக கட்சித் தலைமைத்துவத்தை அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி  சாடியுள்ளார். சிலாங்கூர் பிகேஆர் இணக்கம் இல்லாமல் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் பராமரிப்பு…