பேரணிக்கு முக்ரிஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது ‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’

1 mukrizபுதிதாக பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், மாநில மக்களுக்குள்ள பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர் பக்காத்தான் ரக்யாட் நாளை ‘கறுப்பு 505’ பேரணியை சுகா மெனாந்தி அரங்கில் நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கெடாவில் ஜனநாயக உரிமைகள் வீழ்ச்சி கண்டிருக்கும் என்பதைக் 1 mukriz 1குறிக்கும் கறுப்புத் தினமாகும்” என அலோர் ஸ்டாரின் பிகேஆர் எம்பி கூய் ஹிஸ்யாவ் லியங் (இடம்) கூறினார்.

“கடந்த ஐந்தாண்டுகளில் பக்காத்தான் கெடாவை ஆண்டபோது சுகா மெனாந்தி அரங்கம்  எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்த பாகுபாடின்றி அனுமதிக்கப்பட்டது”, என கூய் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“முக்ரிஸ், அமைதிப் பேரணி நடத்த கெடா மக்களுக்குள்ள உரிமையை மறுத்து பாரபட்சத்துடன் நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது”.

1 mukriz 2முக்ரிஸ், சுகா மெனாந்தியில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் அரங்கில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். அனுமதி கொடுக்கு முன்னர் அப்படிப்பட்ட நிகழ்வின் நோக்கம் குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கெடா ஸ்டேடியம் கார்ப்பரேசன் தலைவர் என்ற முறையில் அவர் அந்த அறிக்கையை விடுத்திருந்தார்.

“புதிய மந்திரி புசாரின் செயல், கடந்த ஐந்தாண்டுகளில் கெடா மக்கள் அனுபவித்த ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாவதைக் குறிக்கிறது”, என கூய் கூறினார்.