பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சனிக்கிழமை பேரணியில் தேவை என்றால் இராணுவம் போலீசுக்கு உதவும்
சனிக்கிழமை, கோலாலும்பூர் பாடாங் மெர்கோக்கில் மாற்றரசுக் கட்சியினர் நடத்தும் பேரணியை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளது. நாட்டில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவது போலீசின் பொறுப்பு என்று உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குனர் சாலே மாட் ரசீட் கூறினார். “போலீசால் அமைதியைக் கட்டிக்காக்க முடியும். தேவையானால் இராணுவத்தின்…
‘505கறுப்புப் பேரணி’க்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: போலீஸ் எச்சரிக்கை
‘முறையான அனுமதிகள்’ இன்றி ஜூன் 22-இல் ‘505கறுப்புப் பேரணி’ நடத்தப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பக்ரி ஸினின் எச்சரித்துள்ளார். செய்தியாளர் கூட்டமொன்றில் போலீஸ் படை துணைத் தலைவர் இவ்வாறு கூறியதாக த ஸ்டார் இணைய செய்தித் தளம் கூறுகிறது. பேரணி…
‘505 கறுப்புப் பேரணி’க்கு முன்னதாக திடீர்கூட்டங்கள்
ஜூன் 22 ‘505 கறுப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்கள் பேரணிக்கு முன்னதாக அதற்கு விறுவிறுப்புச் சேர்ப்பதற்காக இரண்டு திடீர்கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார். நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒரு திடீர்கூட்டம் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்…
டிபிகேஎல்: பாடாங் மெர்போக்கில் பேரணி நடத்த அனுமதி இல்லை
ஜூன் 22-இல், ‘505 கறுப்புப் பேரணியை’பாடாங் மெர்போக்கில் நடத்த அனுமதி கேட்டு பக்காத்தான் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்தது. மூன்று காரணங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டதாக கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். முதலாவதாக, ஜூன் 23-இல், மலேசிய ஒலிம்பிக்…
‘505 கறுப்புப்’ பேரணி ஜூன் 22-க்குத் தள்ளிவைப்பு
பிகேஆர், ஜூன் 15-இல் நடத்தத் திட்டமிட்டிருந்த தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணியைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. “ஜூன் 15-இல் வேறு சில தரப்புகள் அவர்களின் நிகழ்வுகளை நடத்த முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. “டாங் வாங்கி போலீசாருடன் பேச்சு நடத்தி பேரணியை அதற்கு அடுத்த வாரம்…
பாஸ் தலைவர்கள் ஜுன் 15 ‘கறுப்பு 505’ பேரணியில் கலந்து…
பக்காத்தான் ராக்யாட் ஜுன் 15ல் ஏற்பாடு செய்துள்ள 'கறுப்பு 505' பேரணியில் கலந்து கொள்வது என பாஸ் முடிவு செய்துள்ளது. பேரணியில் பங்கு கொள்வது என இன்று காலை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் முகமட் சாபு அறிவித்தார். மே 5…
பாடாங் மெர்போக் மீது பிகேஆர் சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது
பேரணிகளுக்கு தான் ஏற்பாடு செய்யும் போது எப்போதும் சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வதாக பிகேஆர் கூறுகின்றது. இரண்டு இடங்களின் உரிமையாளர்களும் போலீசும் தாங்கள் அனுமதி கொடுக்கும் முன்னர் மற்ற தரப்பின் 'அனுமதியை' பெற வேண்டும் என வலியுறுத்துவதே அதற்குக் காரணமாகும். பாடாங் மெர்போக்கில் 'கறுப்பு 505' பேரணியை ஜுன்…
கேஎல் 505 பேரணி: டாட்டாரான் மெர்டேகாவில் நடத்தத்தான் விருப்பம் ஆனால்…
பக்காத்தான் ரக்யாட், ‘கறுப்பு 505’ பேரணித் தொடரில் கோலாலும்பூர் கட்டப் பேரணியை ஜுன் 15-இல், பாடாங் மெர்போக்கில் நடத்த எண்ணியிருப்பதை போலீசுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்துக்கும் இன்று தெரியப்படுத்தும். பக்காத்தானின் விருப்பத்தைக் கேட்டால், பிற்பகல் மணி 2-க்கு தொடங்கும் அப்பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதே அதன் முதல் தேர்வாக…
கறுப்பு 505 பேரணி : நீதிமன்றத்துக்கு வருமாறு செகுபார்ட்க்கு அழைப்பாணை
பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நாளை வருமாறு Solidariti Anak Muda Malaysia (SAMM) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரினுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே தெரிவிக்காமல் மே 25ம் தேதி பெட்டாலிங் ஜெயா கறுப்பு 505 பேரணியை நடத்தியதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ்…
வெளிநாடுகளில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் மலேசியர்கள் கறுப்புப் பட்டியலிடப்படுவார்கள்
மற்றவற்றோடு “நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணிய” 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள், 1966 கடப்பிதழ் சட்டத்தின்படி மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள்வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட் கூறினார். வெளிநாட்டுக் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்கள், வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள்…
என்ஜிஓ: பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல
13வது பொதுத் தேர்தலை அடுத்து தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்படுவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல என்று ஒரு என்ஜிஓ-வான சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியது. மக்கள் தங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தொடர்பில் பெரிய இடைவெளி நிலவுவதை உணர்ந்து பேரணிகள் மூலமாக அரசாங்கத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொள்கிறார்கள் என்று அதன் பேச்சாளர் …
‘சிலர் எல்லைமீற விரும்பினாலும் பேரணிகள் அமைதியாகவே நடக்கும்’
கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிலர் எல்லைமீறிச் செல்ல முடியாமல் இருப்பது குறித்து வெறுப்புற்றிருந்தாலும் தேர்தல் மோசடிக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகள் எப்போதும் அமைதிப் பேரணிகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “நாம் (பேரணிகளில்) ஊர்வலம் செல்லப்போவதில்லை என அறிவித்தவுடன் ஏமாற்றமடைந்த சில…
டாத்தாரான் பிஜேயில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது
நாடுதழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட எட்டு தொடர் வரிசை கறுப்பு 505 பேரணியின் ஒன்பதாவதும் இறுதியுமான "மக்கள் கூட்டம்" என்று பெயர் இடப்பட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) டாத்தாரான் பிஜேயில் மாலை மணி 5.00 க்கு தொடங்கி இரவு மணி 11.45 க்கு அங்கு குழுமியிருந்த மக்கள் நெகாராகு…
பேரணிக்கு முக்ரிஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது ‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’
புதிதாக பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், மாநில மக்களுக்குள்ள பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் பக்காத்தான் ரக்யாட் நாளை ‘கறுப்பு 505’ பேரணியை சுகா மெனாந்தி அரங்கில் நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கெடாவில் ஜனநாயக உரிமைகள்…
போலீஸ் எச்சரிக்கையையும் மீறி பக்காத்தான் பேரணியில் 60,000 பேர் பங்கேற்றனர்
போலீஸ் சட்டவிரோதமானது என எச்சரிக்கை விடுத்தும் பினாங்கு எஸ்பிளனேட்டில் 'நன்றி தெரிவிக்கும்' பொருட்டு பக்காத்தான் ராக்யாட் மாநில அரசாங்கம் நேற்றிரவு நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் கறுப்பு உடையை அணிந்திருந்தார்கள். மே 5 தேர்தலில் மோசடிகளும் வாக்குகளை…
கிளானா ஜெயா கறுப்புப் பேரணி : பிகேஆர் தலைவர் ஒருவர்…
மே 8 கறுப்பு 505 பேரணி குறித்து போலீசாருக்கு 10 நாட்கள் முன்னதாக தகவல் கொடுக்கத் தவறியதற்காக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மீது அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டாளர் என்ற முறையில் அவர்…
ஜோகூர் பாரு பேரணியில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
ஜோகூர் பாருவில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட்டின் ஐந்தாவது கறுப்பு 505 பேரணியில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். உலு திராம், புத்ரி வாங்சா பிகேஆர் கிளைக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அந்தப் பேரணி நடந்தது. ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா, பினாங்கு, ஈப்போ, குவாந்தான் ஆகியவற்றில்…
ஈப்போ கறுப்பு 505 பேரணியில் 30,000 பேர் கலந்து கொண்டனர்
கோலாலம்பூரிலும் பினாங்கிலும் வெற்றிகரமாக கறுப்பு 505 பேரணிகள் நடத்தப்பட்ட பின்னர் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவதற்கு எதிராகத் துக்கம் அனுசரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஈப்போ, மேடான் இஸ்தானாவில் நடைபெற்ற பேரணியில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பேர் கலந்து கொண்டார்கள். அந்த எண்ணிக்கை பெரும்பாலும் 30,000-ஆக இருக்கலாம் என நேரில்…