பிகேஆர், ஜூன் 15-இல் நடத்தத் திட்டமிட்டிருந்த தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணியைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.
“ஜூன் 15-இல் வேறு சில தரப்புகள் அவர்களின் நிகழ்வுகளை நடத்த முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது.
“டாங் வாங்கி போலீசாருடன் பேச்சு நடத்தி பேரணியை அதற்கு அடுத்த வாரம் ஜூன் 22-இல் நடத்துவதென முடிவு செய்துள்ளோம். நண்பகல் 12 மணிக்குப் பேரணி தொடங்கும் ” என இன்று பெட்டாலிங் ஜெயாவில், செய்தியாளர் கூட்டமொன்றில் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இதனைத் தெரிவித்தார்.
ஜூன் 15-இல், பாடாங் மெர்போக்கில் மறுசுழற்சி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கு அருகிலேயே ஒரு திருமணச் சடங்கும் நடக்கிறது என்றும் அந்நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் கட்சியைத் தொடர்புகொண்டு ஒத்துழைப்பை வேண்டினார்கள் என்றும் ரபிஸி விளக்கினார்.
மே 5 பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவிக்க நாடு முழுக்க பிகேஆர் ஏற்பாடு செய்துவரும் 505 கறுப்புப் பேரணிகளின் வரிசையில் கோலாலும்பூர் பேரணியை வரும் சனிக்கிழமை நடத்த அது திட்டமிட்டிருந்தது.
இந்த பேரணி எல்லாம் இந்தியர்களுக்கு பயன் தராத ஒன்று ….