கோலாலம்பூரிலும் பினாங்கிலும் வெற்றிகரமாக கறுப்பு 505 பேரணிகள் நடத்தப்பட்ட பின்னர் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவதற்கு எதிராகத் துக்கம் அனுசரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஈப்போ, மேடான் இஸ்தானாவில் நடைபெற்ற பேரணியில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பேர் கலந்து கொண்டார்கள்.
அந்த எண்ணிக்கை பெரும்பாலும் 30,000-ஆக இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் கறுப்பு நிற உடைகளை அணிந்திருந்தார்கள்.
கிளானா ஜெயாவிலும் பத்து கவானிலுக் நடத்தப்பட்ட முந்திய நிகழ்வுகளில் 120,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். வரும் செவ்வாய்க்கிழமை குவாந்தானிலும் புதன் கிழமை ஜோகூர் பாருவிலும் கறுப்பு 505 பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடிகளையும் முறைகேடுகளையும் கண்டிக்கும்
பொருட்டு அத்தகைய பேரணிகள் நடத்தப்படுகின்றன.
பேரணி நிகழ்ந்த இடம் பேராக் பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியிலும் மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு அருகிலும் அமைந்திருந்தது.
பேரணியை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என போலீசார் கூறிய போதிலும் அதிகாரிகள் அந்த நிகழ்வில் தலையிடவில்லை என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
“போலீஸ்காரர்கள் அந்த இடத்தில் இருந்தனர். ஆனால் எங்களுக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை,” என தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லீ காங் கூறினார்.
போலிஸ்காரர்கள் எந்த தொந்திரவும் கொடுக்கவில்ல என்பதை அறிய மகிழ்ச்சி. குவந்தானிலும், ஜோகூர்பாருவிலும் தொடர்ந்து எந்தத் தலைக்குனிவையும் ஏற்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்! கறுப்பு 505 பேரணி நாடு முழுவதும் நடைபெற வாழ்த்துகள்!