பாடாங் மெர்போக் மீது பிகேஆர் சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது

Rafiziபேரணிகளுக்கு தான் ஏற்பாடு செய்யும் போது எப்போதும் சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்  கொள்வதாக பிகேஆர் கூறுகின்றது.

இரண்டு இடங்களின் உரிமையாளர்களும் போலீசும் தாங்கள் அனுமதி கொடுக்கும் முன்னர் மற்ற தரப்பின் ‘அனுமதியை’ பெற வேண்டும் என வலியுறுத்துவதே அதற்குக் காரணமாகும்.

பாடாங் மெர்போக்கில் ‘கறுப்பு 505’ பேரணியை ஜுன் 15ல் நடத்துவதற்கு பிகேஆர் கொடுத்த  விண்ணப்பத்துடன் அந்த இடத்தின் உரிமையாளருடைய அங்கீகாரக் கடிதம் இணைக்கப்படாததால்  அந்த விண்ணப்பம் முழுமையானது இல்லை என்று டாங் வாங்கி போலீஸ் கூறியதாக  சொல்லப்படுகின்றது.

“எங்களுடைய கடந்த கால பேரணி அனுபவங்களை பார்க்கும் போது நோட்டீஸ் (முன்னறிவிப்பு)
கொடுக்கப்படும் போது இட உரிமையாளருடைய அங்கீகாரம் இருக்க வேண்டும் என போலீஸ்
வற்புறுத்துவது சிக்கலை ஏற்படுத்துகின்றது.”Raifizi1

“ஏனெனில் இட உரிமையாளர் அதே வேளையில் தான் ஒப்புக் கொள்ளும் முன்னர் போலீஸ் அனுமதி  வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்,” என பிகேஆர் வியூக இயக்குநர் தொடர்பு கொள்ளப்பட்ட  போது கூறினார்.

“ஆகவே இது அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிராக அந்த தேவையற்ற  தடைகள் அமைந்துள்ளன. அதே வேளையில் போலீஸ் அனுமதி என்ற பிரச்னையே எழவில்லை,” என அவர் சொன்னார்.

அறிவிப்பு கொடுத்தால் போதும்

அந்தச் சட்டத்தின் கீழ் பேரணிக்கு 10 நாட்கள் முன்னதாக போலீசுக்கு தகவல் கொடுத்தால் போதும்
என்றும் அதனை பிகேஆர் புதன் கிழமையே செய்து விட்டது என்றும் ராபிஸி தெரிவித்தார்.

rafizi2அதே நாளன்று பாடாங் மெர்போக்கை நிர்வாகம் செய்து வரும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்துக்கு
பேரணியை நடத்துவதற்கான விண்ணப்பமும் அனுப்பப்பட்டு விட்டது.

என்றாலும் இது வரை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை.  பேரணிக்கான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ராபிஸி சொன்னார்.

“இணக்கமான உறவுகளை பராமரிப்பதற்காக டாங் வாங்கி ஒசிபிடி-உடன் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்துவோம். நாங்கள் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளோம்.”

பேரணியை நடத்துவதற்கான பிகேஆர் விண்ணப்பம் முழுமையானதாக இல்லை என்றும் அதனால் அமைதியாக இன்று கூடும் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் போலீஸ்
கூறியதாக நன்யாங் சியாங் பாவ் நாளேட்டின் டிவிட்டர் செய்தி தெரிவித்ததைத் தொடர்ந்து  மலேசியாகினி ராபிஸியுடன் தொடர்பு கொண்டது.

 

TAGS: