கிளானா ஜெயா கறுப்புப் பேரணி : பிகேஆர் தலைவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

nikமே 8 கறுப்பு 505 பேரணி குறித்து போலீசாருக்கு 10 நாட்கள் முன்னதாக தகவல் கொடுக்கத்  தவறியதற்காக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மீது அமைதியாக ஒன்று  கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டாளர் என்ற முறையில் அவர் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனக்  கூறப்பட்டது. அத்துடன் அவர் அந்தக் குற்றத்தை கிளானா ஜெயா அரங்கத்தில் இரவு மணி 8.30
வாக்கில் புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஹானா அயூப் முன்னிலையில் வாசிக்கப்பட்ட
அந்தக் குற்றச்சாட்டை பிகேஆர் தொடர்புப் பிரிவுத் தலைவருமான நிக் நஸ்மி மறுத்தார். அவர் ஜாமீன்
இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)-ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டில்  அவர்
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். அபராதம்
2,000 ரிங்கிட்டுக்கு மேல் போனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் என்ற தகுதியை நிக் நஸ்மி இழக்கக்
கூடும்.