ஜோகூர் பாரு பேரணியில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Rallyஜோகூர் பாருவில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட்டின் ஐந்தாவது கறுப்பு 505 பேரணியில்  30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

உலு திராம், புத்ரி வாங்சா பிகேஆர் கிளைக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அந்தப் பேரணி நடந்தது.

ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா, பினாங்கு, ஈப்போ, குவாந்தான் ஆகியவற்றில் கறுப்பு 505 பேரணிகள்  நடத்தப்பட்டுள்ளன. இந்த ஜோகூர் பாரு பேரணி போலீசார் ஆட்சேபித்ததால் கடைசி நேரத்தில் இடம்  மாற்றப்பட்டது.

13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மீது ஆட்சேபம் தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட ஜோகூர் பாரு பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் ஆவர்.

தூற்றலையும் பொருட்படுத்தாமல் எல்லா இனங்களையும் சார்ந்த ஜோகூர் மக்கள் அங்கு
நிறைந்திருந்தனர். அவர்கள் கூட்டரசு அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதைக் காண ஆர்வமாக
இருந்தனர்.

அந்த நிகழ்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கடமையில் இருந்தனர் என்றும்
அவர்கள் நான்கு மணி நேரம் நீடித்த பேரணியில் தலையிடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்தனர்.

தேர்தல் சீர்திருத்தம்rally1

பேரணி நிறைவடைவதற்குச் சற்று முன்னர் இரவு 10.00 மணி வாக்கில் பிகேஆர் மூத்த தலைவர்  அன்வார் இப்ராஹிம் பேசினார்.

பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு தமக்கு இருப்பதால் தாம் விலகப் போவதில்லை என்றும் ஒய்வு  பெறப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

“செலுத்தப்பட்ட வாக்குகளில் 47 விழுக்காட்டை மட்டுமே பெற்ற ஒருவர் உலகில் எந்த நாட்டில் ஆட்சி  செய்ய முடியும் ?”

“நான் விலகப் போவதில்லை. ஏனெனில் எனக்கு 51 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. மோசடி
காரணமாக எனக்கு வெற்றி மறுக்கப்பட்டுள்ளது,” என அவர் சொன்ன போது பலத்த கைதட்டல்
எழுந்தது.

பெரும்பாலும் 60,000 பேர் கலந்து கொண்டிருக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் பின்னர் மதிப்பிட்டனர்.

தேர்தல் சீர்திருத்தத்துக்கு தாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்குமாறு பேரணியில்
பேசிய ஜோகூர் டிஏபி இளைஞர் தலைவரும் மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினருமான தான் ஹொங்
பின் கேட்டுக் கொண்டார்.

“நமக்கு முன்னே உள்ள பணி பெரியது. அதனால் அதனை நாம் கைவிடக் கூடாது என நான்
ஆதரவளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர்
சொன்னார்.

 

TAGS: