மற்றவற்றோடு “நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணிய” 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும்.
சம்பந்தப்பட்டவர்கள், 1966 கடப்பிதழ் சட்டத்தின்படி மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள்வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட் கூறினார்.
வெளிநாட்டுக் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்கள், வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்றவர் மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார்.
“அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். நாடு திரும்பியதும் அவர்கள் மீண்டும் மலேசியாவைவிட்டு வெளியேற முடியாதபடி அவர்களின் கடப்பிதழ்களை இரத்துச் செய்வோம்”, என்றி அலியாஸ்(இடம்) கூறினார்.
கடப்பிதழ் சட்டத்தின் எந்தப் பகுதியின்கீழ் 6,654 பேரும் நாட்டைவிட்டு வெளியேறுவதினின்றும் தடுக்கப்படுவர் என்பதை அலியாஸ் குறிப்பிடவில்லை.
இதனிடையே, தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் பெர்சே-இன் அனைத்துலக கிளை அமைப்பான குளோபல் பெர்சே, தேசிய ஒற்றுமைக்கு மிரட்டல் விடுக்கும் அலியாசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போலீசையும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-யையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளதைத் தலைமை இயக்குனர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என குளோபல் பெர்சே அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் இப்படிப்பட்ட “மிரட்டல்களைப் புறந்தள்ள வேண்டும்” என்றும் அது வலியுறுத்தியது. கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு. கூட்டரசு அரசமைப்பு, பகுதி 9 கருத்துரைக்க உரிமை வழங்குகிறது என்றது கூறியது.
இதென்ன ஒரே கூத்தாக இருக்கிறது!!! சொல்றவர் மண்டையெல்லம் மூளை. தனி மனிதன் உரிமை பேச்சுரிமெய் பற்றி மறந்து விட்டாரோ…
நல்லது ,இந்த பட்டியலில் முதல் பெயர் கண்டிப்பாக வேதமூர்த்தி என்றுதான் இருக்க வேண்டும் .
இவனுங்க எப்படியெல்லாம் மிரட்டுரானுங்க !
அட போங்கப்பா! நூருல் இசாவுக்கே சபாவுக்குள் நுழையத் தடை.
http://www.themalaysianinsider.com/malaysia/article/nurul-izzah-denied-entry-into-sabah/