ஜூன் 22 ‘505 கறுப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்கள் பேரணிக்கு முன்னதாக அதற்கு விறுவிறுப்புச் சேர்ப்பதற்காக இரண்டு திடீர்கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார்.
நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒரு திடீர்கூட்டம் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சோகோ விற்பனை மையத்தைச் சுற்றிலும் கூடும். அதற்கடுத்த கூட்டம் ஜூன் 19-இல் ஜாலான் துன் பேராக்கில் மாலை மணி 6க்குக் கூடும்.
இத்திடீர்கூட்டங்களை அடுத்து கோலாலும்பூர், சிலாங்கூர் அசெம்ப்ளி மண்டபத்தில் ஜூன் 21-இல் பேரணிக்கு முந்திய-நாள் கூட்டம் நடைபெறும்.
“அதில்,பொதுத் தேர்தல் மோசடிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளப்போகும் ஜூன் 22 பேரணி பற்றி இறுதி விளக்கம் அளிக்கப்படும்”, என்று பட்ருல் இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.