பாஸ் தலைவர்கள் ஜுன் 15 ‘கறுப்பு 505’ பேரணியில் கலந்து கொள்வர்

Rallyபக்காத்தான் ராக்யாட் ஜுன் 15ல் ஏற்பாடு செய்துள்ள ‘கறுப்பு 505’ பேரணியில்  கலந்து கொள்வது என பாஸ் முடிவு செய்துள்ளது.

பேரணியில் பங்கு கொள்வது என இன்று காலை நடைபெற்ற மாதாந்திரக்  கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் முகமட்  சாபு அறிவித்தார்.

மே 5 பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு ஆட்சேபம்  தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள பேரணிகளுக்கு முத்தாய்ப்பாக ஜுன் 15  பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

“ஆம், நாங்கள் அங்கு இருப்போம். இப்போதைய கூட்டத்தில் அதில் கலந்து  கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்,” என முகமட் சாபு  கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த கூட்டத்துக்குப் பின்னர்  நிருபர்களிடம் கூறினார்.Rally1

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்ப்புப் பேரணிகளை அது சுய  விருப்பத்தின் பேரில் நடத்தாது என்றும் எதிர்ப்புப் பேரணிகளில் பங்கு கொள்ளாது  என்றும் அந்தக் கட்சியின் உலாமா பிரிவின் தலைவர் ஹருண் தாயிப் கூறியதாக  அறிவிக்கப்பட்ட பின்னர் பேரணிகளில் பாஸ் கட்சியின் பங்கேற்பு குறித்து கேள்வி  எழுந்தது. முகமட் சாபுவின் அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டுள்ளது.