சுங்கை லிமாவில் பாஸ் தேர்தல் இயந்திரம் அமைந்தது

பாஸ் கட்சி, நேற்றிரவு கெடா, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை அமைத்தது.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டதானது அந்த இடைத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. கட்சி உறுப்பினர்கள்,  மழையினால் சேறும் சகதியுமான மாறிப்போன நிலப்பகுதியில் குடைகளைப் பிடித்தவாறு நிகழ்வினைப் பார்த்துக்…

பாஸ் தலைவர்கள் ஜுன் 15 ‘கறுப்பு 505’ பேரணியில் கலந்து…

பக்காத்தான் ராக்யாட் ஜுன் 15ல் ஏற்பாடு செய்துள்ள 'கறுப்பு 505' பேரணியில்  கலந்து கொள்வது என பாஸ் முடிவு செய்துள்ளது. பேரணியில் பங்கு கொள்வது என இன்று காலை நடைபெற்ற மாதாந்திரக்  கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் முகமட்  சாபு அறிவித்தார். மே 5…

‘குறைகூறலை ஏற்காததால் கெடா பாஸ் வீழ்ச்சி கண்டது’

பாஸ் தலைமை ஏற்றிருந்த கெடா அரசு பிஎன்னிடம் தோற்றதற்குக் குறைகூறல்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமையும் மந்திரி புசார் திறமையாக செயல்படாததும் முக்கிய காரணங்களாகும். பாஸ் தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்ட கிளந்தானுடன் ஒப்பிட்டால் இது தெளிவாகத் தெரியும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல்மீதான ஆய்வுமைய…

‘நஜிப் கேட்டுக் கொண்டால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி பேசப்படும்’

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பு விடுத்தால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி  பாஸ் கட்சி பரிசீலிக்கும். இவ்வாறு அந்தக் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் ஹரூண் தாயிப் கூறுகிறர. அந்த அழைப்பு வெளிப்படையாக இருந்தால் தாம் பாஸ் அந்த யோசனையைத் தீவிரமாக கருதும் என அவர்…

ஹாடி : அம்னோ மூழ்குகிறது அதனுடன் சேர்ந்து நாங்களும் மூழ்க…

மலாய்க்காரர்கள் ஐக்கியமடைய வேண்டும் என அம்னோவில் உள்ளவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். அந்த மலாய் தேசியவாதக் கட்சி 'மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை இனிமேல் காப்பாற்ற முடியாது' என  அவர் வருணித்தார். மூழ்கிக் கொண்டிருக்கும் அம்னோவுடன் பாஸ் சேர்ந்தால் அதுவும் மூழ்கி விடும்…

உங்கள் இடத்தை நினைவில் வைத்திருங்கள் என அஸ்மினுக்கு சிலாங்கூர் பாஸ்…

சிலாங்கூரில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் நிலவும் ஐக்கியத்தைச் சீர்குலைக்கக் கூடிய  ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடும் பல மூத்த மாநில பிகேஆர் தலைவர்க குறித்து அந்த மாநில பாஸ்  இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் அந்த விவகாரம் மீது அம்னோ பல்லவிக்கு ஏற்ப பேசுவதற்கு முன்னர்…

ஜோகூர் பாஸ்: ஹுடுட் சட்டத்துக்கு முதலில் பக்காத்தான் இணக்கம் தேவை

ஜோகூரை பக்காத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றுமானால் சர்ச்சைக்குரிய ஹுடுட் சட்டம் உட்பட எந்த ஒரு  கொள்கையையும் அல்லது சட்டத்தையும் அதன் மூன்று தோழமைக் கட்சிகளுடைய இணக்கத்துடன் மட்டுமே அமலாக்க முடியும் என ஜோகூர் மாநில பாஸ் இன்று கூறியுள்ளது. "ஜோகூரில் உள்ள நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்ய மாட்டோம்.…

பாஸ் எதிர்ப்பு அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் மீட்டுக்…

பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க விரும்புவதால் அதற்கு முஸ்லிம் அல்லாதார் வாக்களிக்கக் கூடாது என தாம் விடுத்த அறிக்கையை ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்ணாண்டஸ் மீட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் அந்த இஸ்லாமியக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். பக்காத்தான் ராக்யாட் திட்டத்தில்…

பெர்னாண்டஸின் ‘தனிப்பட்ட கருத்து’ ஒரு பிரச்னையே அல்ல என்கிறது பாஸ்,…

பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரது 'சொந்தக் கருத்து' என டிஏபி, பாஸ் தலைமைத்துவங்கள்  நிராகரித்துள்ளன. அந்தக் கருத்து பக்காத்தான் ஒத்துழைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அவை தெரிவித்தன. "அது கட்சியின்…

அம்னோ கோட்டையில் நிகழ்ந்த ஹாடி செராமாவுக்குப் பெருங்கூட்டம்

கிராமப்புற சட்டமன்றத் தொகுதியான பெனாகாவில் நேற்றிரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கலந்து கொண்ட செராமா நிகழ்வுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அந்த எண்ணிக்கை ஹாடியை  வியப்பில் ஆழ்த்தி விட்டது. பிஎன் நடவடிக்கை மய்யத்துக்கு அருகில் அதன் நீல நிறக் கொடிகளும் பதாதைகளும் வேட்பாளர்களுடைய சுவரொட்டிகளும்…

டமன்சாரா நெருக்கடிக்கு ‘சித்தாந்த வேறுபாடுகளே’ காரணம்

கோட்டா டமன்சாராவில் வேட்பாளர் நியமனத்தில் பிஎஸ்எம்-மும் பாஸ் கட்சியும் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்கு இரண்டு கட்சிகளினதும் “சித்தாந்த வேறுபாடுகள்தாம்” காரணம் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். “பாஸுக்கும் பிஎஸ்எம்முக்குமிடையில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதால் அது பற்றி விவாதிக்க மேலும் சில நாள்கள் தேவைப்படும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

ஹலோ.. ஹாடி, பிஎஸ்எம் மார்க்சிஸ்ட் கட்சியா?

ஒரு  யுடியூப் வீடியோவில் பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் ஓர் இஸ்லாமிய கட்சி ஒரு "மார்க்சிஸ்ட்" கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளது குறித்து பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடும் தோரணையில் கேட்டுக் கொண்டது. ஹாடிநேரடியாக பெயர் குறிப்பிட்டு  கூறாவிட்டாலும்,…

கோத்தா டமன்சாரா தவிர, பிகேஆர்-பாஸ் தொகுதி மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன

ஆறு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் நிற்பதால் உருவான தகராற்றை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் தீர்த்துக் கொண்டுள்ளன. தலா ஒவ்வொன்றும் மூன்று தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும்  கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மீதான தேக்க நிலை தொடருகின்றது. லாபுவான் (சபா) நாடாளுமன்றத் தொகுதி சுங்கை ஆச்சே (பினாங்கு)…

பாஸ் மட்டுமே மலேசியாவை இஸ்லாத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார் மாட்…

பாஸ் கட்சி மட்டுமே மலேசியாவை இஸ்லாத்தை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும் என இப்போது அந்தக்  கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் கூறுகிறார். "பாஸ் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வர இயலும்," என அவர் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள…

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் இரண்டு தொகுதிகளில் மோதிக் கொள்கின்றன

பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியிலும் மோதுகின்றன. லாபுவானில் பிகேஆர் இப்ராஹிம் மெனுடினையும் பாஸ் ஹாட்னான் முகமட்டையும் நிறுத்தியுள்ளன. அவர்களுடன் அம்னோவைச் சேர்ந்த புதுமுகமான ரோஸ்மான் இஸ்லியும் லாபுவானில் களமிறங்கியுள்ளார். 2008ல் அம்னோவின் யூசோப் மஹால் அந்தத் தொகுதியில்…

முன்னாள் அம்னோ உதவித் தலைவர் மாட் தாயிப் பாஸ் கட்சியில்…

முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். ஆனால்  வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் கழித்து அதாவது திங்கட்கிழமை தான் கட்சி அதிகாரப்பூர்வமாக  அவரை அறிமுகம் செய்யும். 13வது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தெரிவு செய்யப்படும் பொருட்டு அவர் அந்தக் கட்சியில்…

முஸ்தாபாவை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கொண்டு செல்லுங்கள் என்கிறார் ஹரோன்…

பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியைச் சித்திரிப்பதாக கூறப்படும் செக்ஸ் வீடியோ குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என பாஸ் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் விரும்புகிறார். அந்த விவகாரத்தை கையாளுவதற்குக் கட்சியில் உள் நடைமுறை இருக்கிறது என்றும்…

பாஸ், ஆயர் ஈத்தாமில் முஸ்லிம்-அல்லாத ஒருவரைக் களமிறக்குகிறது

பாஸின் ஆயர் ஈத்தாம் வேட்பாளராக  பாஸ் ஆதரவாளர் காங்கிரஸ் (பிஎஸ்சி) தலைவர் ஹு பாங் செள அறிவிக்கப்பட்டுள்ளார்.  அந்த இஸ்லாமிய கட்சியின் வேட்பாளராக முஸ்லிம்-அல்லாத  ஒருவர் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் இன்று காலை ஜோகூர் பாருவில் அந்த அறிவிப்பைச்…

‘அது அம்னோவின் அப்பட்டமான அவதூறு’ என்கிறார் முஸ்தாபாவின் வழக்குரைஞர்

பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் அஸ்முனி அவி, அந்த செக்ஸ்  வீடியோவில் காணப்படும் மனிதர் தமது கட்சிக்காரர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார். முஸ்தாபா தம்மை அவரது பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவர் அவி அண்ட் கோ  என்னும் வழக்குரைஞர் நிறுவனத்துக்குத் தலைமை தாங்குகிறார்.…

அண்மைய செக்ஸ் வீடியோ போலியானது என பாஸ் உதவித் தலைவர்…

பக்காத்தான் ராக்யாட் மூத்த தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அண்மைய செக்ஸ் வீடியோ  'போலியானது' என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கருதுகிறார். "அது ஜோடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம்  சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வீடியோக்களைக் கூட அவர்கள் தயாரிக்க முடியும் என்றால்…

இன்னொரு செக்ஸ் வீடியோவில் இந்த முறை பாஸ் தலைவர் ஒருவர்…

வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் வேளையில் மூத்த பாஸ் தலைவர் ஒருவர்  அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்று பல  அம்னோ வலைப்பதிவுகளில் நேற்று தொடக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஹோட்டல் அறை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும்…

மாட் சாபு : சுங்கை ஆச்சே-யில் மும்முனைப் போட்டி இருக்காது

சுங்கை ஆச்சே தொகுதி மீது பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையிலான பேச்சுகள் வேட்பாளர்  நியமன நாளுக்கு முன்னதாக முடிந்து தீர்வு காணப்படும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை  கொண்டுள்ளார். அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி இருக்காது இரு முனைப் போட்டியே இருக்கும் என…

பினாங்கு சுங்கை ஆச்சே-யில் போட்டியிடுவதில் பாஸ் உறுதியாக இருக்கிறது

மே 5ம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தலில் சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் தனது  முடிவில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. அதன் தொடர்பில் தான் தோழமைக் கட்சியான பிகேஆர்-உடன் பேச வேண்டியிருந்தாலும் தேர்தலில் அம்னோவுக்கு எதிராக அது கடுமையாக போராட வேண்டியிருந்தாலும் பாஸ் தனது முடிவிலிருந்து பின்…