‘நஜிப் கேட்டுக் கொண்டால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி பேசப்படும்’

umnoஅம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அழைப்பு விடுத்தால் மட்டுமே பாஸ்-அம்னோ பிணைப்பு பற்றி  பாஸ் கட்சி பரிசீலிக்கும்.

இவ்வாறு அந்தக் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் ஹரூண் தாயிப் கூறுகிறர.

அந்த அழைப்பு வெளிப்படையாக இருந்தால் தாம் பாஸ் அந்த யோசனையைத் தீவிரமாக கருதும் என
அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

umno1“அம்னோ தனக்கு பாஸ் கட்சி தேவைப்பட்டால் முதலில் அது வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லது அது அடித்தட்டு உறுப்பினர்களுடைய நெருக்குதல் மட்டும் தானா ?”

அம்னோ-பாஸ் ஐக்கியம் குறித்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. 13வது பொதுத் தேர்தல்  முடிவுகளுக்குப் பின்னர் அதற்கான வேண்டுகோள் மீண்டும் எழுப்பப்படுகின்றது.

அம்னோவும் பாஸ் கட்சியும் இந்த நாட்டில் மலாய்-முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் பெரிய கட்சிகள்  என்ற முறையில் மலாய், முஸ்லிம் ஒற்றுமைக்காக அந்த யோசனை அடிக்கடி கூறப்படுகின்றது.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அந்த யோசனையை நிராகரித்துள்ளார் என்றாலும் முன்னாள் பாஸ்  துணைத் தலைவரான நசாருதின் மாட் ஈசாவும் முன்னாள் கெடா பாஸ் துணை ஆணையர் முஸ்லிம்  ஒஸ்மானும் அம்னோ-பாஸ் ஐக்கியத்துக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

 

TAGS: