பாஸ் மட்டுமே மலேசியாவை இஸ்லாத்துக்குக் கொண்டு செல்லும் என்கிறார் மாட் தாயிப்

pasபாஸ் கட்சி மட்டுமே மலேசியாவை இஸ்லாத்தை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும் என இப்போது அந்தக்  கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் கூறுகிறார்.

“பாஸ் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வர இயலும்,” என அவர் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள  பாஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் உறுப்பினர் விண்ணப்ப பாரத்தைச்  சமர்பித்த பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

“உண்மையான வழிகாட்டுதலைக் கொண்டு வரும் அந்தக் கட்சிக்கு நான் ஆதரவளிக்க வேண்டும்.”

பிஎன் மலேசியாவை மேம்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட முகமட், ஆனால் அந்த ‘மேம்பாடு ஆன்மா இல்லாதது’ என்றார். அதனால் வளமான நகர்ப்புற சமுதாயத்தில் தார்மீகச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது எனச் சொன்னார்.

“உண்மையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மாநகரங்கள் இஸ்லாத்தின் கலங்கரை விளக்கங்களாக விளங்கி,  உட்புறப்பகுதிகளுக்கு வழி காட்ட வேண்டும்.”

 

TAGS: