கோத்தா டமன்சாரா தவிர, பிகேஆர்-பாஸ் தொகுதி மோதல்கள் தீர்க்கப்பட்டுள்ளன

pakatஆறு தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் நிற்பதால் உருவான தகராற்றை பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் தீர்த்துக் கொண்டுள்ளன. தலா ஒவ்வொன்றும் மூன்று தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. என்றாலும்  கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதி மீதான தேக்க நிலை தொடருகின்றது.

லாபுவான் (சபா) நாடாளுமன்றத் தொகுதி சுங்கை ஆச்சே (பினாங்கு) சட்டமன்றத் தொகுதி, பாந்தி (ஜோகூர்) சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை பாஸ் கட்சி பிகேஆர் கட்சிக்குக் கொடுக்கும் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொன்னதாக அந்தக் கட்சியின் ஏடான ஹாராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு ஈடாக திரங்கானுவில் உள்ள புக்கிட் பெசி, செபராங் தாக்கிர், கோத்தா புத்ரா சட்டமன்றத் தொகுதிகளை பிகேஆர் பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கும்.

கோத்தா டமன்சாரா தொகுதி மீது பிகேஆர்-பாஸ்-பிஎஸ்எம் ஆகியவற்றுக்கு இடையில் இன்னும் விவாதங்கள் தொடருவதாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.

அந்தத் தொகுதிக்கான நடப்பு பிஎஸ்எம் உறுப்பினர் நாசிர் ஹஷிம், 2008ல் அந்தத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் வெற்றி பெற்றார். அவர் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள மீண்டும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

10 ஆண்டு காலம் காத்திருந்த பின்னர் அண்மையில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்எம் தனது சொந்த சோஷலிச
சின்னத்தில் போட்டியிட விரும்பியதால் பிகேஆர்-டன் அது  சர்ச்சையில் ஈடுபட்டது.

எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்னும் பிரச்னை தீர்ந்தாலும் அந்தத் தொகுதி தொடர்பான வேறுபாடுகள்
தீராததால் வேட்பாளர் நியமன நாளன்று பாஸ் தனது சொந்த வேட்பாளரான ரிட்சுவான் இஸ்மாயிலை
நாசிருக்கு எதிராகக் களமிறக்கியது.

பாஸ் கட்சிக்கு சித்தாந்தம் ஒரு பிரச்னை

அதனால் இரண்டு எதிர்த்தரப்புக் கூட்டாளிகளும் அம்னோ/பிஎன் வேட்பாளர் ஹலிமாத்துன் சாடியா போஹான்  , இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோருடன் பல முனைப் போட்டியை எதிர்நோக்க வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

pakat1பக்காத்தானுடைய தோற்றத்திற்கு முரண்பாடான தோற்றத்தை தரக் கூடியவர்கள் என தாம் கூறிக் கொள்ளும்  சில வேட்பாளர்களுக்கு பாஸ் ஆட்சேபம் செய்வதாக ஹாடி நேற்று திரங்கானுவில் செராமா ஒன்றில் கூறியதாக  பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

“கடந்த கால கம்யூனிஸ்ட் தலைவர்களான லெனின், ஸ்டாலின், கார்ல் மாக்ஸ் போன்றவர்களுடைய படங்களை  தங்கள் தலைமையகங்களில் சில வேட்பாளர்கள் மாட்டியுள்ளனர்.”

அத்தகைய வேட்பாளர்களுடன் பாஸ் வேலை செய்ய முடியாது என அவர் சொன்னதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: