“நஜிப் சரிப்பட்டு வரமாட்டார் என நினைக்கிறார் மகாதிர்”

டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹமட் படாவிக்குச் செய்ததுபோலவே பதவியிலிருந்து இறங்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார். பிஎன் வேட்பாளர்களை முறையாக ஆய்வு செய்ய அடுத்த பொதுத்தேர்தலைத் தாமதப்படுத்துமாறு மகாதிர் நஜிப்புக்கு ஆலோசனை கூறியிருப்பதாக…

கிளந்தான் அரசாங்கம்: விவாதத்துக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் முகமட் இந்ரா பற்றிய சர்ச்சை மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவுடன் பொது விவாதம் நடத்த வருமாறு கிளந்தான் பாஸ் அரசாங்கம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினை அழைக்கவில்லை. இவ்வாறு பாஸ் கட்சியின் நாளேடான ஹராக்காவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய விவகாரம்…

பாதிக்கப்பட்டவரைப் பார்க்க பாஸ் அனுமதிக்கப்படவில்லை

பாஸ் குழு ஒன்று புக்கிட் கெப்போங் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜமிலா அபு பாக்காரைச் சந்திப்பதை 10 பேர் தடுத்து விட்டனர். அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட் இன்று வெளியிட்டார். ஜோகூர் ஸ்கூடாய் கானானில் வசிக்கும் ஜமிலாவைச் சந்திக்க  பாஸ் துணைத் தலைவர்…

பாஸ்: கெடா “எம்பி”-யை மாற்றும் திட்டம் இல்லை

பாஸ் கட்சி , கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் நோயுற்றிருப்பதால் அவரின் இடத்தில் மற்றொருவரை நியமனம் செய்ய விரும்புகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தியை   மறுக்கிறது. "தமக்குப் பதில் இன்னொருவரை அமர்த்தும் பாஸின் முயற்சியை அசிசான் எதிர்க்கிறார்" என்ற தலைப்பில் த ஸ்டாரில் வெளிவந்துள்ள செய்தியைக்…

பாஸ்: நஜிப்பும் நஸ்ரியும் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துகின்றனர்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீது அண்மையில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் முரண்பாடான போக்கைப் பின்பற்றுவதின் மூலம் மூத்த பிஎன் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பாஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியது. "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் நாடாளுமன்றத்தை…

பாஸ்: நஜிப் போக்கு நாடாளுமன்ற தேர்வுக் குழு மீதான ஆர்வத்தையே…

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்த அரசாங்கத்தின் போக்கு அது உண்மையாக இல்லை என்பதைக் காட்டுவதால் அந்தக் குழுவில் பாஸ் பங்கு கொள்ளாமல் போகலாம். இவ்வாறு கூறிய பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்ய அரச விசாரணை ஆணையம்…

பிஎன், இராணுவத்தை அரசியலுக்குள் இழுப்பதாக பாஸ் சாடுகிறது

இராணுவத்தைக் கட்சி அரசியலுக்குள் கொண்டு வர சில தரப்புக்கள் முயலுவதாகத் தோன்றுகிறது- அது மாமன்னரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என பாஸ் கூறுகிறது. இராணுவம் மாமன்னருடைய நேரடிப் பார்வையின் கீழ் வருவதால் அத்தகைய முயற்சிகள் அகோங்கிற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். சுதந்திரம் பெற்றது…