அரசு கொள்கையைக் குறைகூறியதற்காக ஹசான் அலி மன்னிப்பு கேட்டார்

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி, கட்சியின் சமூகநலக் கொள்கையைக் குறைகூறியதற்கு மன்னிப்புக் கேட்டதுடன் அவ்விவகாரம் தொடர்பில் தாம் கூறியதையெல்லாம் மீட்டுக்கொண்டிருக்கிறார். “பாஸ் உறுப்பினர் மற்றும் மத்திய செயல்குழு உறுப்பினர் என்ற முறையில், அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தபோது எல்லைமீறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். “சமூகநல அரசு தொடர்பில் நான்…

தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் காலமானார்

பாஸ் தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் இன்று காலை மணி 12.55 அளவில் மாரடைப்பால் காலமானார். அச்செய்தியை பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் தமது பேஸ்புக்கில் இன்று அதிகாலையில் பதிவு செய்தார். அவரது சவ அடக்கம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று பாசிர்…

மாபூஸ்: ஹசன் பாஸ்மீது போர் தொடுப்பதுபோல் தெரிகிறது

சிலாங்கூர் பாஸ் ஆணையர், ஹசன் அலி கட்சியின் சமூகநல அரசு பற்றிய கொள்கை குறித்து கேள்வி எழுப்புவது கட்சியின்மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார். சமூகநல அரசுக் கொள்கை கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, அது பற்றி  இப்போது…

ஹசான்: அம்னோ வலை குறித்த ஆதாரத்தை எனக்குக் காட்டுங்கள்

நெருக்கடியில் சிக்கியிருக்கும் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, அம்னோ வலைக்குள் தாம் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறுவதை மெய்பிக்குமாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலிக்கு சவால் விடுத்துள்ளார். முஸ்தாபாவின் குற்றச்சாட்டுக்கள் "அகங்காரமானது" என்றும் "அவதூறு என்ற நெருப்புடன் விளையாடுவது" என்றும் ஹசான் வருணித்தார். கூடிய விரைவில்…

பாஸ் “பிரச்னையை உண்டாக்கும்” இருவருக்கு எதிராக பாஸ் மனோவியல் போர்ப்…

பாஸ் கட்சியை பற்றி தவறாகப் பேசி வருவதாகக் கூறப்படும் 'அதிருப்தி அடைந்த' இரண்டு கட்சித் தலைவர்களுக்கு எதிராக முழு அளவில் மனோவியல் போரைத் தொடங்குவதற்கு அந்தக் கட்சியின் அனைத்து அமைப்புக்களும் தயாராகி வருகின்றன. முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் முகமட்…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்காட பாஸ் கட்சிக்கு அனுமதி…

பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்தும் அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் வழக்காடுவதற்கு அனுமதி கோரி பாஸ் சமர்பித்த விண்ணப்பம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) நீதிபதி ரோஹானா யூசோப், அந்த முடிவை அறிவித்தார். விண்ணப்பதாரர்களில் இருவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும்…

பாஸ்: கெடாவில் ஹூடுட் சட்டம் இல்லை

கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு வெளியில் ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் பாஸ் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுவாலா இவ்வாறு கூறினார். பாஸ் அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுமுன்னர் மக்கள்தொகை அமைப்பையும் கருத்தில் கொள்ளும். “முஸ்லிம் மக்களைப் பேரளவில்…

பாஸ் கட்சியின் 10 அம்ச சமூக நல நாடு திட்டம்…

பாஸ் கட்சி அண்மையில் சமூக நல நாட்டுக்கான 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டது. அதனைக் கடுமையாக குறை கூறும் பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது அறிக்கைகளை இன்று முக்கிய மலாய் மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. அந்த யோசனை ஏற்கனவே பிஎன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்துக்கு மிகவும்…

ஹசான் அலி: “நான் பக்காத்தானுடன் ஒத்துழைக்கத் தயார்”

பாஸ், பக்காத்தான் ராக்யாட் ஆகியவை, மலாய், இஸ்லாம், மன்னராட்சி கோட்பாடுகளை மேம்படுத்தி தற்காக்கும் வரையில் அவற்றுடன் அணுக்கமாக தொடர்ந்து வேலை செய்யத் தாம் தயாராக இருப்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் ஹசான் முகமட் அலி கூறுகிறார். பாஸ் கட்சிக்குள் தாம் தொடர்ந்து சிரமங்களை எதிர்ந்நோக்கி…

ஹூடுட் சட்டம் இடம் பெறாத பாஸ் கட்சியின் கொள்கை ஆவணம்

பாஸ் கட்சி அதன் மிக அண்மைய பொதுநல அரசு மீதான கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. பத்து கூறுகள் அடங்கிய அந்த ஆவணம்  2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சி மக்கள் முன் வைத்த பொதுநல அரசு…

“ஹசான் அலி வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்?”

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தமது கோம்பாக் செத்தியா சட்ட மன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிட உள்ளூர் கிளைகளிடமிருந்து போதுமான நியமனங்களைப் பெறவில்லை என்பதை சிலாங்கூர் பாஸ் உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் மூன்று நியமனங்களைச் சமர்பிக்கும். பின்னர் அதனைக் கட்சி மத்தியத்…

பாஸ்: என்எப்சி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் காரையும் நிலத்தையும்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தொழில் சாராத சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், விலை உயர்ந்த ஒரு கார், புத்ராஜெயாவில் நல்ல மதிப்புள்ள நிலம் ஆகியவை அடங்கும் என பாஸ் உதவித் தலைவர்…

“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

பெக்கிடா எனப்படும் மலேசியப் பிரச்சார நலன் சங்கத்துக்கு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அளித்துள்ள வெளிப்படையான அங்கீகாரம்,  தமது மிதவாதக் கோட்பாட்டையும் ஒரே மலேசியா வாதத்தையும் கை கழுவி விட்ட மலாய்த் தீவிரவாதி அவர் என்பதற்குத் தக்க சான்று என சிலாங்கூர் பாஸ் கட்சி சாடியுள்ளது. "பெக்கிடா நிகழ்வில்…

ஹசன் அலியால் மட்டுமே சிலாங்கூரைக் காப்பாற்ற முடியும்-உத்துசான்

சிலாங்கூரைக் காப்பாற்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். அந்த ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் சைனி ஹசான் தம் வாராந்திர பத்தியில் இவ்வாறு கூறுகிறார். ஹசனை(வலம்) ஒரு போராளி என்று…

பாஸ்: அரசாங்கச் சேவையில் “எதிர்ப்பு” உருவாகும்

அரசாங்கச் சேவையில் உயர் நிலைப் பதவிகளுக்கு "வெளி நிபுணர்கள்" நியமிக்கப்படுவதை அனுமதிக்கும் முறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என பாஸ் கூறுகிறது. காரணம் அத்தகைய நடவடிக்கை அரசாங்க ஊழியர்களிடையே ஆத்திரத்தை மூட்டி விடும் என அது தெரிவித்தது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மூத்த பதவிகளில் உள்ளவர்கள் அமைதியாக இருக்க…

பாஸ் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பேரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மீது விவாதம் நடத்துவதற்கு மக்களவையில் பாஸ் கட்சி சமர்பித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் தமது அலுவலக அறையில் நிராகரித்தார். அந்தத் தீர்மானத்தை பாஸ் குபாங் கெரியான் உறுப்பினர் சலாஹுடின் அயூப் கடந்த…

அமைதியான பாஸ் “செராமா”வில் ஆணிகள் கண்டுபிடிப்பால் பரபரப்பு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு உரையாற்றிக்கொண்டிருந்த பினாங்கு பாயான் லெப்பாஸ் செராமா அமைதியாக நடந்து முடிந்திருக்கும். ஆனால், செராமா நடைபெற்ற இடத்துக்கு அருகில் பெரிய ஆணிகள் கொத்தாகக் கண்டெடுக்கப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வாக்கில் செராமாவின் முடிவில் கட்சியின் பாதுகாப்பு அணியினர் (யூனிட் அமால்) ஓர்…

ஹுடுட் விவகாரத்தை முஸ்லிம் அல்லாதாருடன் விவாதியுங்கள் என பாஸ் கட்சிக்கு…

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் பாஸ் கட்சி, கூட்டரசு அரசியலமைப்பையும் கட்சியின் அமைப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என அந்தக் கட்சிக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. கூட்டரசு அரசியலமைப்பை பின்பற்றுவதாக அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. அதில் ஹுடுட் சட்ட அமலாக்கமும் அடங்கும் என பாஸ் ஆதரவாளர்…

பாஸ்: கிளந்தான் மக்கள் ஹூடுட்டுக்குத்தான் வாக்களித்தனர்

கிளந்தான் அரசுக்கு ஹூடுட்டை அமல்படுத்தும் அதிகாரம் ஜனநாயக முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு ஜனநாயக உணர்வுடன் உரிய மதிப்பளிக்க வேண்டும். இதை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் இஸ்லாமியக் குறிக்கோள்களைக் கொண்டிருப்பதால்தான் அக்கட்சியைக் கிளந்தான் வாக்காளர்கள்…

பாஸ் பினாங்கில் தன் இருப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது

இஸ்லாமியக் கட்சியான பாஸ் பினாங்கில்தான் தோற்றம் கண்டது என்பதைப் பலர் அறியமாட்டார்கள். அதனால்தான் அக்கட்சி அதன் 60ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாட கப்பாளா பத்தாசைத் தேர்ந்தெடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்த விழாவின்வழி பினாங்கில் தன் இருப்பை வலுவான முறையில் புலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சி எண்ணியுள்ளது என்கிறார் பாரிட் புந்தார் எம்பி…

வாக்காளர் பட்டியல் துப்புரவுபடுத்தப்பட மக்கள் சக்தியே காரணம்

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ள பாஸ் இளைஞர் பகுதி, தேர்தல் ஆணையம்(இசி) 70,361 பெயர்களை அப்பட்டியலிலிருந்து நீக்கியது “மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று வருணித்துள்ளது. இசி, ஜூலைக்கும் செப்டம்பர் 15-க்குமிடையில் தேசிய பதிவுத்துறையின்(என்ஆர்டி) ஒத்துழைப்புடன் இறந்துபோன 69,293 வாக்காளர்களின் பெயர்களையும் குடியுரிமை பறிக்கப்பட்ட 1068 பேரின்…

மிஸ்மாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன

சர்ச்சைக்கு இலக்கான வாக்காளர் மிஸ்மா, சட்டப்பூர்வமாகவே மலேசியக் குடியுரிமை பெற்றதாகக் கூறிக்கொண்டாலும் அவருக்கு முதலில் நிரந்தர வசிப்பிடத் தகுதியும்(பிஆர்) பின்னர் குடியுரிமையும் வழங்கப்பட்டதில் குடிநுழைவுக் கொள்கை மீறப்பட்டுள்ளது என்று பாஸ் இளைஞர் பகுதி கூறுகிறது. இந்தோனேசியாவின் பாவீன் தீவைச் சேர்ந்த மிஸ்மா என்றழைக்கப்படும் நிஸ்மா நயிம், குடிநுழைவு விதிகளின்கீழ்…