கிளந்தான் அரசுக்கு ஹூடுட்டை அமல்படுத்தும் அதிகாரம் ஜனநாயக முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு ஜனநாயக உணர்வுடன் உரிய மதிப்பளிக்க வேண்டும்.
இதை இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்த பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், பாஸ் இஸ்லாமியக் குறிக்கோள்களைக் கொண்டிருப்பதால்தான் அக்கட்சியைக் கிளந்தான் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர் என்றார்.
இப்போது ஷியாரியா குற்றவியல் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி முடிவு செய்ய வேண்டியது கிளந்தான் அரசுதானே தவிர மத்திய அரசுக்கு அதில் சம்பந்தமில்லை. என்றாரவர்.
அதைக் கூட்டரசு அரசாங்கம் ஏற்கிறதா என்பது இரண்டாம் பட்சம்தான்.
இஸ்லாமியக் குறிக்கோள்களைக் கொண்டிருப்பதால்தான் பாஸைக் கிளந்தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதன் அடிப்படையில் தங்கள் சமயவழி நடப்பதற்கு அவர்களுக்குள்ள உரிமை மதிக்கப்பட வேண்டும்.
அதை எதிர்க்கும் முயற்சி ஜனநாயக உணர்வுக்கு முரணானது என்றாரவர்.