பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாஸ் “பாதுகாவலர்களை” அனுப்புகிறது
டத்தாரான் மெர்டேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பாஸ் யுனிட் அமல் என்றழைக்கப்படும் அதன் பழுத்த சிவப்பு நிற சீருடை பொதுநல குழுவை களமிறங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்றிரவிலிருந்து 30 யுனிட் அமல் ஆர்வலர்கள் டத்தாரான் மெர்டேக்காவில் நிறுத்தி வைக்கப்படுவர் என்று பாஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கைருல்…
பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலுக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை திரட்டும்
மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டுமாறு பாஸ் கட்சி இன்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்படா விட்டால் நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், உறவுகள் ஆகியவற்றைக் கால ஒட்டத்தில் நாசப்படுத்தக் கூடிய வாக்காளர்…
அந்நியர்களை வாக்காளர்களாக மாற்றும் ‘பணிக்குழுவை’ பாஸ் கண்டு பிடித்துள்ளது
அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செய்யும் 'பணிக் குழு' ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதைக் காட்டும் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று கூறிக் கொண்டுள்ளார். பாஸ் கட்சியின் ஏடான ஹராக்கா டெய்லி ஏட்டில் வெளியான செய்தியில் அவர்…
அனைத்து யூதத் தொடர்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன என பாஸ் இளைஞர்…
யூத அமைப்புக்களுடன் அவை யூத இனவாதத்தை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அவற்றுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் வலியுறுத்தியுள்ளார். யூத மக்களுடன் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இன்றைய சூழ்நிலை வேறுபட்டுள்ளதே அதற்குக் காரணம் என நஸ்ருதின் தெரிவித்தார்.…
பாஸ் யூதர்களுடன் ஒத்துழைக்கும், யூத நாட்டின் ஆதரவாளர்களுடன் ஒத்துழைக்காது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், யூதர்களுடன் ஒத்துழைப்பதை, அதுவும் குறிப்பாக வணிகத்தில், கட்சி அனுமதிக்கிறது என்றும் ஆனால் யூத நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கமான சயோனிசத்தை அது நிராகரிக்கிறது என்றும் கூறியுள்ளார். யூதர்களுடன் ஒத்துழைக்க இடமளிக்கப்படுகிறது ஏனென்றால் முஸ்லிம்-அல்லாதாருடன் வணிகம் செய்வது எப்போதுமே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்றாரவர்.…
அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்
கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார். நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து…
ரிம600மில்லியன்: கெடா பாஸ் நெருக்கடிக்குக் காரணம்
ரிம600மில்லியன் மெகா திட்டத்துக்கான குத்தகையை அம்னோ-தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செய்த முடிவுதான் கெடா பாஸ் கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிற்று. இதை, மாநில ஆட்சிக்குழுவில் மறுநியமனம் செய்யப்பட்டதை முதலில் ஏற்க மறுத்த இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பஹரோல்ரசி முகம்மட்…
எதிர்த்த இருவர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்
பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயில் சாலேயும் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை ஏற்றுக் கொள்வர். அதனால் கெடா பாஸ்-ஸில் எழுந்த தலைமைத்துவ நெருக்கடி தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க பாஸ் மத்தியக் குழு ஒப்புக் கொண்டதில் தாங்கள் மன நிறைவு…
பாஹ்ரோல்ராஸி பேசுவதற்கு கெடா கூட்டத்துக்கு முன்னதாக தடை
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்ற பின்னர் தாம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக கெடா மாநில பாஸ் துணை ஆணையாளர் பாஹ்ரோல்ராஸி ஸாவாவி கூறுகிறார். பாஹ்ரோல்ராஸிக்கும் அவரது எஜமானரான கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்-கிற்கும் இடையிலான தகராறைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்தக்…
அலோர் ஸ்டாரில் நாளை பாஸ் சிறப்புக் கூட்டம்
பாஸ் மத்திய செயலவை,கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் (கீழே) குக்கும் துணை மந்திரி புசார் பஹ்ரொல்ரசி ஜவாவிக்குமிடையில் நிலவுவதாகக் கூறப்படும் கருத்துவேறுபாட்டைக் களையும் நோக்கில் நாளை அலோர் ஸ்டாரில் கூடும். கூட்டம் நடத்தும் முடிவு, நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற பாஸ் மத்திய செயலவையின் மூன்று-மணி நேர…
தேர்தலில் பாஸ் கட்சி புதுமுகங்களையும் முஸ்லிம் அல்லாதாரையும் நிறுத்தும்
அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பல புதுமுகங்களை நிறுத்தும். அவர்களில் பல முஸ்லிம் அல்லாதவர்களும் தொழில் நிபுணர்களும் முன்னாள் அரசாங்க ஊழியர்களும் இருப்பதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். அவர் 'புத்ராஜெயாவுக்கு பாஸ் செல்லும் வழிமுறை' என்னும் தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட…
இஸ்ரேலிய விவகாரம் மீது பகிரங்கமாகப் பேசுங்கள் என அன்வாருக்கு அறிவுரை
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் மீது விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை பகிரங்கமாகி விட்டதால் அந்த விவகாரத்தை அவர் "வெளிப்படையாக" விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் விரும்புகிறார். இவ்வாறு அவரை மேற்கோள் காட்டி மலாய் மொழி நாளேடான உத்துசான்…
பாஸ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவர்
பாஸ் கட்சியின் அடிநிலைத் தலைவர்களுடைய ஆதரவு வலுவாக இருப்பதால் அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் தலைவர் ஹாடி அவாங்-கும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடும். ஏற்கனவே தாம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ள ஹாடி, தேர்தலுக்கு கட்சியை ஆயத்தம் செய்வதில்…
பாஸ்: திரெங்கானு எம்பி, தாம் சொன்னதை மூன்று நாள்களில் திரும்பப்…
பாஸ் தன்னைப் பற்றி திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளது. பாஸ்“மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் போதனைகளைக் கொண்ட கட்சி” என்று அஹமட் சைட் கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகக்…
தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிப்பில் பாஸ் மும்முரம்
13வது பொதுத் தேர்தல் “தேர்தல்களுக்கெல்லாம் பெரிய தேர்தல்” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் குறிப்பிட்டபோது பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, பாரிசான் நேசனல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவப்போகும் மிகப் பெரிய தேர்தல்தான் அது என்று குத்தலாகக் கூறினார். கூறியது மட்டுமல்ல,பிஎன்னை மண்ணைக் கவ்வ வைத்து…
ஹசன் அலி கூறுவதுபோல் புல்லுருவிகள் கட்சியில் இல்லை-பாஸ் இளைஞர்கள்
பாஸ் இளைஞர் பகுதி கட்சியில் உள்ள புல்லுருவிகளைக் களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசன் அலி கேட்டுக்கொண்டிருப்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கிறார் அதன் தலைவர் நஸ்ருதின் ஹசன். நேற்று அவரைத் தொடர்புகொண்டபோது அவர்,“நான் எந்தவொரு தரப்பினரும் சொல்வதைக்…
ஹசான் அலி: பாஸ் தலைமைத்துவத்தை மதச் சார்பற்ற குழு ஒன்று…
பாஸ் கட்சித் தலைமைத்துவத்தில் 72 விழுக்காடு மதச் சார்பற்ற குழு ஒன்றின் கட்டுக்குள் இருப்பதாக முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி கூறிக் கொண்டுள்ளார். அந்தக் குழு "டிஏபி, பிகேஆர் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிறது" என்றும் அவர் சொன்னார். பாஸ் தலைமைத்துவத்தில் எஞ்சியுள்ள பகுதியில் சமய அறிஞர்கள் இருக்கின்றனர்.…
எதிர்வரும் தேர்தலில் ஹாடி அவாங் போட்டியிடுவார்
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளதை பாஸ் ஏகமனதாக நிராகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. "அப்துல் ஹாடியும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் அடுத்த தேர்தலில் சட்டமன்ற அல்லது…
ஜோகூர் பாஸ் தலைவருடைய காரும் வீட்டு வரவேற்பு அறையும் தீயில்…
ஜோகூர் பாஸ் துணை ஆணையாளர் டாக்டர் சுல்கெப்லி அகமட்-டின் பிஎம்டபிள்யூ காரும் அவரது வீட்டின் வரவேற்பு அறையும் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ வைப்பு என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் சேதமடைந்தன. ஸ்கூடாய்க்கு அருகில் உள்ள தாமான் யூனிவர்சிட்டியில் வசிக்கும் அவர் அதிகாலை மணி 3.40 வாக்கில் அந்தச் சம்பவம்…
இஸ்ரேல் மீது அன்வார் விளக்கமளிக்க வேண்டும் என நிக் அஜிஸ்…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு இரண்டு நாட்டுத் தீர்வுக்கு தாம் அளித்துள்ள ஆதரவை விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் கேட்டுக் கொண்டுள்ளார். அன்வார் விளக்கமளிப்பது அவசியம் எனக் கூறிய அவர், காரணம் பரவலாக பல…
ஹாடி பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அன்வார்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பதாக மலாய்மொழி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், பக்காத்தான் ரக்யாட் அவ்வளவு எளிதில் அவரை விட்டு விடாது. மாற்றரசுக் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட்டில் அப்துல் ஹாடி “முக்கிய…
பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை
பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. “எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக…
அன்வாரை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் நிக் அஜிஸ்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை, அவரது அரசியல் எதிரிகளும் முக்கிய ஊடகங்களும் தொடர்ந்து அவமானப்படுத்தக் கூடாது என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். "பல ஆண்டுகளாக பத்திரிக்கைகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது பெரிய பாவமாகும். காரணம் அவை அன்வாருடைய…