இஸ்ரேல் மீது அன்வார் விளக்கமளிக்க வேண்டும் என நிக் அஜிஸ் விரும்புகிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு இரண்டு நாட்டுத் தீர்வுக்கு தாம் அளித்துள்ள ஆதரவை விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அன்வார் விளக்கமளிப்பது அவசியம் எனக் கூறிய அவர், காரணம் பரவலாக பல அவதூறுகள் எழுந்துள்ளன என்றார். நிக் அஜிஸின் செய்தியை இன்று உத்துசான் மலேசியா வெளியிட்டது.

“இது காறும் அன்வாரை குறியாகக் கொண்டு பல அவதூறுகல் கூறப்பட்டுள்ளன. ஆகவே அவர் அதனை விளக்குவது நல்லது,” என நிக் அஜிஸ் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

இஸ்ரேல் பாலஸ்தீன அவாக்களுக்கு மதிப்பளித்தால் இஸ்ரேலுடைய பாதுகாப்புக்கு வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு ஜனவரி 26ம் தேதி அளித்த பேட்டியில் அன்வார் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனிடையே அன்வார் அறிக்கை அவரது சொந்தக் கருத்தாகவும் இருக்கலாம் என சிலாங்கூர் மாநில பாஸ் துணை ஆணையர் காலித் சாமாட் கூறியிருக்கிறார்.

“கொள்கை அளவில் பாலஸ்தீன உரிமைகளையும் நிலத்தையும் அபகரித்த வன்முறைகள் வழியாக  சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டை பாஸ் அங்கீகரிக்கவில்லை,” என அவர் சொன்னதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கையில் பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள மூன்று தோழமைக் கட்சிகளும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

அன்வார் அறிக்கை மீது தமது அரசாங்கம் வியப்படைந்திருப்பதாக மலேசியாவுக்கான பாளஸ்தீன தூதர் அப்தெல் அஜிஸ் அபுகோஷ் கூறினார்.

இஸ்ரேலிடம் 200க்கும் மேற்பட்ட அணு எறிமுனைகளை வைத்துள்ளது.  அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய இராணுவத்தையும்  பெற்றுள்ளது.”

“எந்தத் தரப்புக்குப் பாதுகாப்பு வேண்டும், படையெடுப்பாளர்களுக்கா அல்லது அன்றாடம் ஒடுக்கப்பட்டு மனித நேயமற்ற கட்டுப்பாடுகளுக்கு இலக்காகி வரும் பாலஸ்தீனர்களா? “, என அவர் வினவியதாகவும் கூறப்பட்டது.

TAGS: