பாஸ் யூதர்களுடன் ஒத்துழைக்கும், யூத நாட்டின் ஆதரவாளர்களுடன் ஒத்துழைக்காது

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், யூதர்களுடன் ஒத்துழைப்பதை, அதுவும் குறிப்பாக வணிகத்தில், கட்சி அனுமதிக்கிறது என்றும் ஆனால்  யூத நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கமான சயோனிசத்தை அது நிராகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

யூதர்களுடன் ஒத்துழைக்க இடமளிக்கப்படுகிறது ஏனென்றால் முஸ்லிம்-அல்லாதாருடன் வணிகம் செய்வது எப்போதுமே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது  என்றாரவர்.

“என்றாலும் பாஸ் சயோனிசத்தை நிராகரிக்கிறது.ஏனென்றால் அது யூத இனத்தின் வெறித்தனமான கொள்கையாகும்”. அப்துல் ஹாடி, நேற்றிரவு ஷா ஆலமில் பாஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்தின் கேள்வி-பதில் அங்கத்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.

அப்போது அங்கு பாஸ் ஆன்மிக தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அசிஸ் நிக் மாட்டும் இருந்தார்.

எதிர்வரும் தேர்தலில் பாஸ் கிளைகள் கேட்டுக்கொண்டால் கலைஞர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த கட்சி தயாராக உள்ளது என்றும் அப்துல் ஹாடி தெரிவித்தார்.

-பெர்னாமா

TAGS: