அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்

கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார்.

நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

சமர்பிக்கப்பட்ட பெயர்களுக்கு சுல்தான் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என அஜிஸான் இஸ்தானாவுக்கு வெளியில் காத்திருந்த நிருபர்களிடம் கூறினார்.

“சுல்தான் பின்னர் ஒப்புதல் கடிதத்தை வழங்குவார். அதற்கு சிறிது காலம் பிடிக்கும்,” எனக் குறிப்பிட்ட அவர் சுல்தான் ஒப்புதல் அளிப்பதையும் சுல்தானுக்கு உள்ள நிகழ்ச்சிகளையும் புதிய இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியேற்புச் சடங்குகள் சார்ந்திருப்பதாகவும் அஜிஸான் சொன்னார்.

பாஹ்ரோலாஸி ஸாவாவியும் டாக்டர் இஸ்மாயில் சாலேயும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை நிராகரித்த பின்னர் பிப்ரவரி 28ம் தேதி நிகழ்ந்த ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளவில்லை.

அவர்களுடைய ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிக் காலம் கடந்த புதன் கிழமை முடிவுக்கு வந்தது.

மாநில ஆட்சி மன்றத்துக்கு மீண்டும் நியமிக்கப்படுவதற்கு அஜிஸானுடன் நிலவும் கருத்து வேறுபாடு காரணம் என கெடா பாஸ் துணை ஆணையர் 1-மான பாஹ்ரோலாஸி அப்போது கூறினார்.

கெடா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கான மறு நியமனங்களை ஏற்றுக் கொள்ளுமாறு பாஸ் மத்தியக் குழு மார்ச் 5ம் தேதி பாஹ்ரோலாஸிக்கும் இஸ்மாயிலுக்கும் ஆணையிட்டது.

-பெர்னாமா

TAGS: