பொதுநல இலாகாவால் வேண்டுமென்றே இழிவுபடுத்தப்பட்டதால் உடல் ஊனமுற்றவர் படியில் தவழ்ந்தே…

உடல் ஊனமுற்ற ஒருவர் தமது மகஜர் ஒன்றை கெடா பொதுநல இலாகாவிடம் (ஜேகேஎம்) தாக்கல் செய்வதற்காக பல படிகளை தவழ்ந்தே ஏறிச் சென்றார். அவருக்காக அவரது மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சியை அவ்விலாகா இயக்குனர் வேண்டுமென்றே இழிவுபடுத்தியதால், அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார். பெர்சத்துவான் ஒகேயு செத்தியா டெயரா கூலிம்…

கெடா மாநிலச் செயலாளர் விலக வேண்டும் என ஊராட்சி மன்ற…

கெடா மாநிலச் செயலாளர் ராஸ்லி பாசிர் பதவி துறக்க வேண்டும் எனக் கோரி அலோர் ஸ்டாரில் மாநிலச் செயலகம் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வெளியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர். கிராமத் தலைவர்களும் உள்ளிட்டிருந்த அந்த ஊராட்சிமன்ற உறுப்பினர் குழு ஏற்கனவே இது போன்று மூன்று…

மாட் சாபு கெடாவில் போட்டியிடுவதையே விரும்புகிறார்

 பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் களம் இறக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும் கெடாவில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதையே விரும்புகிறார். ஆனாலும், எங்கு போட்டியிடுவது என்ற முடிவைக் கட்சி செயலவையிடமே விட்டுவிட மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் தீர்மானித்திருக்கிறார்.  பல…

அஜிஸான் வேலைக்குத் திரும்பினார், ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களுக்கு இடையில் அவர் நேற்று மீண்டும் தமது பணிகளைத் தொடர்ந்தார். அவர் நேற்று வழக்கம் போல மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாக அவரது அரசியல் செயலாளர் முகமட்…

கெடா வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்ராஜெயா ரிம12.3மில்லியன் ஒதுக்கீடு

கூட்டரசு அரசாங்கம் கெடாவில் வீடமைப்புத் திட்டங்களுக்காக  இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் ரிம8மில்லியனைச் செலவிட்டிருக்கிறது.அதன் அமைப்புகளின்வழி இப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்(கெடா), கியாட் மாரா ஆகியவையே அவ்வமைப்புகளாகும்.அவை புதிய வீடுகள் கட்டுவதிலும் பழைய வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ஜனவரிக்கும் மார்சுக்குமிடையில் கெடா ரிம4,158,000செலவில் 378…

கெடா எம்பி: மெர்செடிஸ் எனக்காக அல்ல; விருந்தினருக்காக

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசு வாங்கிய மெர்செடிஸ் பென்ஸ் எஸ்350 கார் தமக்காக அல்லவென்றும் கெடாவுக்கு வருகை புரியும் விருந்தினர்களுக்காக அது வாங்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார். டாக்டர் மகாதிர் முகம்மட் கெடாவுக்கு வருகை மேற்கொண்டபோதும் ஜோகூர் பட்டத்திளவரசர் கோலா நெராங்கில் ஒருவாரம் பயிற்சியில்…

கெடா அரசு ஆடம்பரச் செலவு செய்வதாக கெராக்கான் குற்றச்சாட்டு

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அதிகாரப்பூர்வ பணிகளுக்காக ஆடம்பரக் கார்கள் வாங்குவதில் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குறைகூறப்பட்டுள்ளது. கெடா அரசு, கடந்த ஆண்டு இறுதியில் மந்திரி புசாருக்காக மெர்செடிஸ் எஸ்320 கார் ஒன்றை வாங்கியதாக மாநில கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங்…

கெடாவில் பிஎன் வெற்றி பெற்றால் முக்ரிஸ் மந்திரி புசார்

அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில் பிஎன் வெற்றிபெற்றால் ஜெர்லுன் சட்டமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் மந்திரி புசார் ஆக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அண்மையில் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா, அம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்திய ஆய்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர் முக்ரிசுக்கு…

பாஹ்ரோல்ராஸி, இஸ்மாயில் ஆகியோர் கெடா ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி…

கெடா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பாஹ்ரோல்ராஸி ஸாவாவியும் டாக்டர் இஸ்மாயில் சாலே-யும் இன்று கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு அனுவார் சுல்தான் பாட்லிஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்தச் சடங்கு அலோர் ஸ்டாரில் உள்ள இஸ்தானா அனாக் புக்கிட்-டில் இன்று…

தாம் திவாலாகி விட்டதாக கோலா நெராங் பேராளர் அறிவித்துள்ளார்

உள்ளூர் வங்கி ஒன்றிடம் தாம் வாங்கிய 8 மில்லியன் ரிங்கிட் கடனை அடைக்க முடியாததால் தாம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கெடா கோலா நெராங் சட்ட மன்ற உறுப்பினர்  சையட் சோப்ரி சையட் ஹஷிம் நேற்றிரவு தெரிவித்துள்ளார். 1998ம் ஆண்டு புர்சா மலேசியா பங்குச் சந்தையின் இரண்டாவது…

கடைசி பட்சமாகத்தான் மும்முனைப் போட்டி,கெடா டிஏபி விளக்கம்

பக்காத்தான் ரக்யாட்டில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே கெடா டிஏபி மும்முனைப் போட்டியில் இறங்கும். இவ்வாறு, நேற்று தாம் விடுத்த அறிக்கை  குறித்து விளக்கமளித்துள்ளார்  டிஏபி டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினர் லீ குவான் ஏய்க்.ஆனால், நிலைமை அந்த அளவுக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட…

கூடுதல் தொகுதிகள் இல்லையேல் மும்முனை போட்டிதான் -டிஏபி எச்சரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-க்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லையென்றால் அக்கட்சி வேறு வழியில்லாமல் மும்முனை போட்டியை உருவாக்கக்கூடும். கெடாவில் டிஏபி-இன் ஒரே சட்டமன்ற உறுப்பினராகவுள்ள லீ குவான் ஏய்க் இவ்வாறு கூறியுள்ளார். டிஏபி, கெடா அரசில் கூடுதல் பங்காற்ற விரும்புகிறது, அதற்கு மாநில அரசில் கூடுதல் பிரதிநிதிகள் இருக்க…

கெடா பாஸ் இளைஞர்கள்: பாஹ்ரோல்ராஸி போக வேண்டும் என நாங்கள்…

கெடா பாஸ் தலைமைத்துவத்திலிருந்து துணை ஆணையர்களான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி-யும் இஸ்மாயில் சாலே-யும்  விலக வேண்டும் என கெடா பாஸ் இளைஞர் பிரிவு விரும்புகிறது. மாநில பாஸ் இளைஞர் பிரிவின் மூத்த தலைவருமான அந்த  வட்டாரம் அதனைத் தெரிவித்தது. அந்த முடிவு இளைஞர் பிரிவின் சொந்த முடிவு என்றும் வெளியார்…

அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்

கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார். நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து…

ரிம600மில்லியன்: கெடா பாஸ் நெருக்கடிக்குக் காரணம்

ரிம600மில்லியன் மெகா திட்டத்துக்கான குத்தகையை அம்னோ-தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செய்த முடிவுதான் கெடா பாஸ் கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிற்று. இதை, மாநில ஆட்சிக்குழுவில் மறுநியமனம் செய்யப்பட்டதை முதலில் ஏற்க மறுத்த இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பஹரோல்ரசி முகம்மட்…

எதிர்த்த இருவர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டனர்

பாஹ்ரோல்ராஸியும் இஸ்மாயில் சாலேயும் ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனங்களை ஏற்றுக் கொள்வர்.  அதனால் கெடா பாஸ்-ஸில் எழுந்த தலைமைத்துவ நெருக்கடி தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க நடவடிக்கைக் குழு ஒன்றை அமைக்க பாஸ் மத்தியக் குழு ஒப்புக் கொண்டதில் தாங்கள் மன நிறைவு…

அலோர் ஸ்டாரில் நாளை பாஸ் சிறப்புக் கூட்டம்

பாஸ் மத்திய செயலவை,கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் (கீழே) குக்கும் துணை மந்திரி புசார் பஹ்ரொல்ரசி ஜவாவிக்குமிடையில் நிலவுவதாகக் கூறப்படும் கருத்துவேறுபாட்டைக் களையும் நோக்கில் நாளை அலோர் ஸ்டாரில் கூடும். கூட்டம் நடத்தும் முடிவு, நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற பாஸ் மத்திய செயலவையின் மூன்று-மணி நேர…

“கெடாவில் பிஎன்னுக்கு இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு உயர்ந்துள்ளது”

கெடா மாநிலத்தில் பாரிசான் நேசனலின் தலைமைத்துவதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மாநில பாரிசான் தலைவர் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா கூறினார். அந்த அளவிலான ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து பிஎன் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக…

UUCA எதிர்ப்பு மாணவர்கள் கெடா மந்திரி புசாருக்கு இறுதி எச்சரிக்கை…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ஆதரிக்கும் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அலோர் ஸ்டாரில் அவரது அலுவலகம் அமைந்துள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு வெளியில் பிப்ரவரி 19ம் தேதி பேரணி ஒன்றை அவர் எதிர்…

கோத்தா சிபூத்தே மீது முறையீடு செய்ய கெடா சபாநாயகருக்கு அனுமதி

கோத்தா சிபூத்தே பேராளர் அபு ஹசான் ஷரிப்பை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்துவதற்கு முறையீட்டு நீதிமன்றம் செய்துள்ள முடிவை எதிர்த்து கெடா மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஈசா இஸ்மாயில் மேல் முறையீடு செய்து கொள்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ்…

கூலிம் மது தடை:கெடா அரசைக் கீழறுக்கும் செயலா?

கூலிம் மாவட்ட நிர்வாகம் இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து மது விற்பனையை நிறுத்திவைக்க  செய்துள்ள முடிவு, கெடா அரசைக் கீழறுக்கும் ஒரு செயலாகும் என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அது, மாவட்ட அலுவலகம் கெடா அரசுக்கோ அதன் ஆட்சிக்குழுவினருக்கோ தெரிவிக்காமல் தன்மூப்பாக எடுத்துள்ள ஒரு முடிவு என்று…