உடல் ஊனமுற்ற ஒருவர் தமது மகஜர் ஒன்றை கெடா பொதுநல இலாகாவிடம் (ஜேகேஎம்) தாக்கல் செய்வதற்காக பல படிகளை தவழ்ந்தே ஏறிச் சென்றார். அவருக்காக அவரது மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சியை அவ்விலாகா இயக்குனர் வேண்டுமென்றே இழிவுபடுத்தியதால், அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.
பெர்சத்துவான் ஒகேயு செத்தியா டெயரா கூலிம் என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பொதுநல நன்மைகள் பற்றி ஜேகேஎம் முன்பு இன்று பிற்பகல் மணி 1.30 க்கு கூடி கண்டனக் குரல் எழுப்பினர் என்று தொடர்பு கொண்டபோது படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.
ஆனால், கூலிம் ஜேகேஎம் இயக்குனர் ரொஹானா யுசுப் அந்த மகஜரை ஏற்க மறுத்து விட்டு அக்கட்டத்தின் முதல் மாடியில் அவரது இலாகாவின் அலுவலகத்திற்குள் இருந்து கொண்டார்.
கடும் வெயிலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பின்னர், அந்த மன்றத்தின் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஞானப்பிரகாசன், வயது 53, அந்த மகஜரை அவரே முதல் மாடிக்குச் சென்று ரொஹானாவிடம் கொடுக்க தீர்மானித்தார். அவர் உடல் ஊனமுற்றவராதலால், அவரால் நடக்க முடியாது.
“அந்த மகஜரை தனது வாயில் கவ்விக் கொண்டு, தனது கைகளைப் பயன்படுத்தி அந்தப் படிகளில் தவழ்ந்து ஏறிச் சென்று ரொஹானா அவரது அறையிலிருந்து வெளியில் வந்து மகஜரைப் பெற்றுக் கொள்ளும் வரையில் அவரது அறையின் கதவை தட்டித் தீர்த்தார்”, என்று சுரேந்திரன் கூறினார்.
இச்சம்பவம் இந்நாட்டின் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்கள் மீது பொதுநல இலாகா காட்டும் பரிவின்மையை வெளிப்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார்.
“இது ஊனமுற்றோரின் திடீர் தாக்குதல். இது ஒரு தேசிய அவமானம். இதற்கு (மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு) அமைச்சர் பதில் கூற வேண்டும்”, என்று அவர் கூறினார்.
மகஜரில் கூறப்பட்டிருந்த குறைபாடுகளில் ஒன்று கூலிம் ஜேகேஎம் அலுவலகம் முதல் மாடியில் அமைந்திருப்பதாகும். உடல் ஊனமுற்றவர்கள் அங்கு சென்றடைவது கடினமானதாகும்.
ஜேகேஎம் உடல் ஊனமுற்றவர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்ல மறுத்தது இன்னொரு விவகாரமாகும். இன்னும் பலர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுநல அலவன்ஸ்கள் கிடைப்பதில்லை என்ற புகாராகும்.
இச்சம்பவம் நடந்த வேளையில், லுனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நசாருடினும், பிகேஆர் சட்டப் பிரிவு தலைவர் லத்தீபா கோயாவும் அங்கிருந்தனர்.
ஒருவனை –ஒருவன் அடித்து கொல்லும் மலேசியா தமிழ் இளவயதினர்களில்..இப்படி நடக்கும் இந்த திமிரான மலாய் அதிகாரிக்கு பாடம் புகட்ட ஒருவன் இல்லையா ??? இந்த அதிகாரி வாழும் வரை இந்த மாதிரி நடக்கவேண்டும் …செருப்பால் ..துடைப்பத்தால் ..தமிழா மாணவர்களை அடிக்கும் மலாய் ஆசிரியர்கள் பாடம் படிப்பித்தால் சாகும் வரை தமிழ் மாணவனின் மேல் கைவைக்க மாட்டார்கள் …தென் ஆபிரிக்காவில் நிற துவேச வெள்ளை ஆட்சியில் கூட இந்த கேவலங்கள் நடக்கவில்லை ….மலேசியா தமிழர்களுக்கு ரோசம் இல்லையா ???
செருப்பால் அடித்த மாதிரி ஒரு போராட்டம். நம் நாட்டு அதிகாரிகள் அலுவலகங்களை அவர்களின் சொகுசுக்காக அமைத்து கொள்கிறார்களே தவிர, பொது மக்களின் நலன் காக்க படுவதில்லை.
கெட்ட மந்திரி புசார் முக்கிரிஸ் ஆட்சியில் மனித நேயம் செத்துப்போச்சி!
இதுவெல்லாம் 14 வது தேர்தலுக்குள் மறந்து விடுவார்கள் ! மலேசிய இந்தியன் திருந்த மாட்டான் ! 14 வது பொது தேர்தலுக்கு ம இ கா BN வெற்றியை உறுதி செய்யும் , IPF BN க்கு வெற்றிக்கு பாடுபடும் ,PPP ஜால்ரா அடிக்கும்,ஐக்கிய ம இ கா செத்தாலும் ஒத்து ஊதும் , ஹிண்ட்ராப் புளு பிரிண்ட் ரெட் பிரிண்ட் என்று சொல்லி மக்களை ஏயிக்கும், ஊனம் உற்றவருக்கு கொடுக்கும் மரியாதையை பாருங்கள் , இவர்களுக்கு YB என்ற புகழ் மண்ணாங்கட்டி !
இது போன்ற அமைப்புக்களில் வேலை செய்பவர்கள் உடல் ஊனமுற்றவர்களாக இருக்க வேண்டும். அது இயக்குனாராக இருந்தாலும் சரி சாதாரண வேலையில் பணி புரிபவர்களாக இருந்தாலும் சரி. மற்றவர்களுக்கு அவர்கள் கஷ்டம் புரியாது. மந்திரி பெசார் அலுவலகம் இதனைக் கவனிக்க வேண்டும்.
இந்த கேவலத்தை பற்றி எழுத நினைக்கிறேன், ஆனால் வார்த்தைகள் இல்ல தவிக்கிறேன்.
இந்த மாதிரி வலையங்கட்டி காளை வெட்டி நடக்க சொல்லணும்!!!
இதற்கெல்லாம் நாமே தான் காரணம்—நமக்கு மானம் ஈனம் சூடு சொரணை இல்லை—- 56 ஆண்டுகள் நம்மை இந்த இழிநிலைக்கு கொணர்ந்த BN-ம் MIC காரன் களையும் இதுவரை நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே? அதிகாரத்தில் உள்ள மலாய்க்கார ஜென்மங்கள் நம்மை எவ்வளவுக்கு மிதிக்கமுடியுமோ அவ்வளவுக்கு மேலும் அகங்காரத்துடன் செய்கின்றான்கள். நம் உடன் பிறப்புக்கு நாம் என்ன செய்தோம்?
இரக்கமே இல்லாத மனசுக்கு , பதவி எதுக்கு. உன் வீட்டுல யாராவது இந்த மாதிரி இருந்தால் உனக்கு இவர்களோட மனக்கஸ்ட்டம் தெரியும் புரியும். நீ எல்லாம் மனசன்னு உலகத்துல வாளர.
அந்த அதிகாரி மேல நடவடிக்கை எடுக்க முடியுமா?எடுக்க முடியாது எனா அவர் அரசாங்க அதிகாரி,அதுவே எதிர்க்கட்சி அதிகாரிய இருந்த இந்நேரம் பார்க்கணுமே படமா ஓடும்,கட்சிக்கு கட்சி நம்ம இரோ லாம் வருவாங்க.
மலேசியா தமிழர்கள் உங்களுக்கு நடக்கும் இழிவுகளை ..பத்திரிகையில் எழுதுவதோ …உதவாக்கரை மலாய் போலீசிடம் ..சொல்லுவதோ சரிபடாது …உடனுக்குடன் இமாதிரியான நிகழ்வுகளை அங்குள்ள ஐரோப்பிய தூதரங்களுக்கு மற்றும் UN AGENCIES களுக்கும் தெரிவியுங்கள் ..1000 கணக்கில் மகஜர்கள் போக வேண்டும் நிச்சயம் பலன் கிடைக்கும் கூடவே சர்வதேச மீடியாக்களுக்கும் உடனுக்குடன் அறிவியுங்கள் இந்த கேவலம் ஆப்பிரிக்க நாடுகளில் கூட நடை பெறாது!!!
சோழனின் கருத்து பயனான கருத்து,கடைபிடிப்போம்.
ஒன்னே ஒன்னுதான் காரணம்னு நெனைக்கிறேன். கொஞ்சமும் வெக்கமும் மானமும் சூடும் சுரனையும் இல்லாம மீண்டும் மீண்டும் BNக்கு நமது வற்றாத ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வழங்கவோம்; வழங்கிக் கொண்டே இருப்போம். நம் வாழ்வில் வசந்தம் வீசிவிடும்.
இந்த மாதிரி நூதன போராட்டம் தொடர்ந்தால், புத்தி கெட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு புத்தி வந்து உடனுக்குடனே ஓடி வருவான். வரவில்லை என்றால் வரவைப்போம்.
அடுத்த தேர்தலுக்கும் அரிசிக்கும் மீகுனுக்கும் வரிசையில் நிற்போம் இன்னும் அதிகமாக மரியாதை கிடைக்கும்.
பிணம் தின்னி நரிகள் கூட்டம் கூட கொஞ்சம் இரக்கப்படும்.இவள் ஒரு
கொடூர அரக்கி இவளது இரண்டு கால்கலையும் இழந்து படியில் ஏற
வைக்க வேண்டும்.அப்பொழுது மற்றவர் வேதனை இவளுக்கு புரியும் .
இன்னமும் நமது இந்திய அரசியல் கட்சிகள் – கையேந்தி பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் போது அரசியலில் இல்லாத அப்பாவி மக்கள் அன்றாட வாழ்கையை இப்படிதான் கழிக்கவேண்டி உள்ளது . ஏழை படும் பாடு சிம்மாசனத்தில் அமர்திருக்கும் வக்கிரபுத்தி காரர்களுக்கு எங்கே புரியபோகுது. MIC இன்னமும் வாய்மூடி கிடக்கிறது , PPP போன இடம் தெரியல , வேதமூர்த்தி மறைத்தே போனார் , கருப்பு சூட் போட்ட 4D இன்னும் மயக்கதில் இருக்கிறார்!! என்வனா ஒருத்தன் இருக்கிறானா பாருங்கள் ??